கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2-ம் கட்ட சிறப்பு முகாம்

 Saturday, September 22, 2018  12:30 PM

கோவை மாவட்டத்தில் 1.1.2019-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பணி அடுத்த மாதம்(அக்டோபர்) 31-ந் தேதி வரை நடக்கிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்களிடமிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய அடுத்த மாதம் 31-ந் தேதி வரை வாக்குப்பதிவு மையங்கள், கோட்ட வருவாய் அதிகாரி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் படிவங்கள் பெறப்படும்.மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) 2-ம் கட்டமாகவும்,தொடர்ந்து அடுத்த மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த முகாம்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய படிவம் 8, குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியின் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

மேலும் வருகிற 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ள சிறப்பு கிராம சபை மற்றும் குடியிருப்போர் நல சங்க கூட்டங்களிலும் அந்த பகுதிக்கான வாக்காளர் பட்டியலின் சம்பந்தப்பட்ட பாகங்கள் வாசிக் கப்படும்.இந்த வாய்ப்பை பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Mbile App promo
FB Ad
Youtube channel