நல்ல விளைச்சலுக்கு வழிகாட்டும் பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி

 Wednesday, March 14, 2018  08:30 PM

2 ஆயிரம் வருடம் பாரம்பரியம் கொண்டது, கோவைஅருகில் பொள்ளாச்சி ஊரில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த ஊர் விவசாயம் செழிக்கும் பூமி. இங்கு மிகவும் பிரபலமான சந்தை உள்ளது. இன்றும் அருகே உள்ள ஊர்களில் இருந்து வந்து இச்சந்தையில் தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு வருகின்றனர். எல்லாவிதமான பொருட்களின் ஆட்சி இருக்கும் என்பதால், பொருள்கள் ஆட்சி நாளடைவில் பொள்ளாச்சி என்று ஆனது. மற்றுமொரு பெயர்க்காரணம் இந்த இடம் நல்ல செழிப்பான மண்வாகு உள்ள பூமி. இங்குள்ள சோலைகள் பொழில்கள் என்று அழைத்தனர். சிறிய ஊர்கள் வாய்ச்சி என்று கூறுவர். அதுவே பொழில்வாய்ச்சி – பொள்ளாச்சி என்றும் ஆனது என்கின்றனர்.

இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் இந்த திருக்கோவில் கொங்கு நாட்டை ஆண்ட சுந்தரபாண்டியன், மற்றும் கொங்கு சக்கரவர்த்தி விக்ரம சோழன் ஆகியோர் காலத்தில் கட்டப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் கோவிலின் தெற்கு சுவற்றில் கொச்சி அரச பரம்பரையைச் சேர்ந்த மன்னர் பெரும்படப்பு சொரூபத்தின் ஆறாம் ஆண்டு ஆட்சி கல்வெட்டும் உள்ளது. அதில் இந்த திருத்தலத்தின் பெயர் திருவகத்தீஸ்வரமுடையார் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் அப்பொழுது இது சிவதலமாக இருந்திருக்கும் என்று குறிப்பு கூறுகிறது.


Custom1
இங்குள்ள மக்கள் தங்கள் விளைநிலங்களில் நல்ல விளைச்சல் தரவேண்டி இந்த தலத்து முருகபெருமானிடம் வேண்டுகின்றனர். மேலும் இங்கு வந்து முருகனிடம் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி வைப்பார் என்று நம்புகின்றனர். குறிப்பாக தடைபட்ட திருமணங்கள் சுலபமாக நடந்தேறி நல்வாழ்வு அமையும் என்பது ஐதீகம்.
கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு தனி சன்னதி உண்டு. அதன் எதிரில் ராஜ கோபுரம் அமைந்துள்ளது. கருவறையில் முருகபெருமான் வள்ளி, தெய்வானை காட்சி தருகின்றனர். முருகபெருமான் மயில்மீது அமர்ந்து காட்சி தருகின்றார். சுகாசனத்தில் ஒருமுகம் காட்டி நான்கு கரங்களுடனும், அபய வாத முத்திரை காட்டி காட்சி தருகின்றார். மயில் இடப்புறமாக தலையைக் காட்டி இருப்பதால் இதை தேவமயில் என்று கருதப்படுகிறது. இங்கு முருக பெருமான் மயில் மீது இருப்பது ஒரே கல்லினால் ஆனது என்பதால் மிகவும் கலை நுணுக்கத் தோடு உருவாக்கியுள்ளது பிரமிக்க வைக்கிறது. வள்ளியும், தெய்வானையும் அவர்களது ஒரு கரத்தில் மலரையும் மற்றொரு கரத்தில் கத்ய வலம்பித முத்திரைகளையும் காட்டி அபயம் அளிக்கின்றனர்.

ஒருபகுதியில் புடைப்பு சிற்பமாக இந்த கோவிலை கட்டியது சுந்தரபாண்டிய மன்னனும் அவரது மனைவியும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் இங்கு ராமர் சீதை திருவுருவங்களும், சுந்தரேசுவரர் மீனாட்சி அம்மன் சன்னதியும் அப்பர் சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தர், கண்ணப்பநாயனார், விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, காமாட்சி அம்மன், காளி, அர்த்தநாரீஸ்வரர், அனுமன் ஆகியோர் உள்ளனர். துர்க்கைக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

சிற்ப வேலைபாடுகள் சிறப்பாக உள்ளன. இங்குள்ள யாழி ஒன்றின் வாயில் தொங்கும் மூன்று கல் வளையங்கள் அதிசயமான அற்புதமான வேலைப்பாட்டுடன் பிரமிக்க வைக்கிறது. அனைத்து விஷேச காலங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. சூரசம்ஹாரம், சஷ்டி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, பிரதோஷம் என சிவ வைஷ்ணவ விழாக்கள் ஒரு சேர இங்கு நடைபெறுவது விசேஷம். பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் உள்ளது. காலை 7 மணி முதல் பகல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.


Cusomt2

Custom3


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil 1
Website Square Ad spp1
Website Square Vanavil2
Website Square Ad spp3
Website Square Ad spp2