புதிய படங்கள் திரையிடாததால் ஒரு வாரத்தில் ரூ.20 கோடி இழப்பு

 Wednesday, March 14, 2018  09:19 AM

கோவை, திருப்பூர், ஈரோடு, ஊட்டி ஆகிய நான்கு மாவட்டங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் ஒரு வாரத்தில் மட்டும் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.தமிழ் சினிமா சமீப காலமாக பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. சினிமா டிக்கெட்களுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி வரி, திரைத்துறையினரின் பலத்த எதிர்ப்பால் 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. தமிழக அரசின் 30 சதவீத கேளிக்கை வரிக்கு எதிராக தியேட்டர்களை மூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் 8 சதவீதமாக குறைக்கப்பட்டது. சம்பள பிரச்னையால் பெப்சி தொழிலாளர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. அடுத்தடுத்த பிரச்னைகளால் சிக்கி தவித்த தமிழ்சினிமாவிற்கு, தற்போது கியூப், யூ.எப்.ஓ., உள்ளிட்ட நிறுவனங்கள், டிஜிட்டல் ஒளிபரப்பு சேவைக்காக கட்டணம் உயர்த்தியது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட உரிமையாளர்கள், டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் இடையே நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது. படங்களை திரையிட கியூப், யூ.எப்.ஓ., உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்து பட அதிபர்கள் கடந்த 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளனர். இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 க்கும் மேற்பட்ட படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 16ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு நடக்காது என்றும் அறிவித்துள்ளனர். இந்த பிரச்னையால் பெரும் இழப்பை சந்தித்த தியேட்டர் உரிமையாளர்கள், கேளிக்கை வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல் தற்காலிகமாக தியேட்டர்களை மூடுவதாக அறிவித்துள்ளனர்.

Custom3

இதுகுறித்து கோவை,ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது கியூப், யூ.எப்.ஓ தொழில்நுட்பங்கள் வழியாக சினிமா படம் திரையிடப்படுகிறது. இதற்கான ஒளிபரப்பு கட்டணம் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு, திரைப்பட உரிமையாளர்கள் செலுத்துகின்றனர். இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக, கடந்த 1ம் தேதி முதல் படத்தை வெளியிடாமல் திரைப்பட உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் 2 வாரமாக தமிழ் படங்கள் வெளியாகவில்லை. தாராவி, யாழ், மெர்லின், நகரவேட்டை என 4 படங்கள் மட்டுமே வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை. நிலைமையை சமாளிக்க ஏற்கனவே வெளியான மெர்சல், மேயாத மான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை திரையிட்டோம். இந்த படங்களுக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் சொற்பமாக உள்ளது.

ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டும் திரையிடப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக வசூல் இல்லாததால் பெரும் நெருக்கடிக்கு தியேட்டர் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.ஏற்கனவே ஜிஎஸ்டி., க்கு பிறகு தியேட்டர்களில் பெரிய கலெக்சன் இல்லை. தற்போது இந்த பிரச்னையால் கலெக்சன் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் சம்பளம், மின்சார கட்டணம், பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்குகூட தியேட்டரில் வசூல் இல்லை. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 169 தியேட்டர்களில் 42 தியேட்டர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவித்தப்படி 16ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடினால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். இந்த பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு, சுப்ரமணியன் கூறினார்.


Cusomt2

Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp3
Website Square Ad spp1
Website Square Ad spp2
Website Square Vanavil2
Website Square Vanavil 1