கோவையை குளிர்வித்த கோடை மழை

 Wednesday, March 14, 2018  09:18 AM

கோவையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென நகரின் பல்வேறு பகுதியில் மழை பெய்தது.

கோவையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவுக்கு வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் அதிகபட்சமாக 102 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அடித்தது. சாலைகளில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சூறாவளி காற்றுடன் நகரின் பல்வேறு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. 20 நிமிடம் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.

மேலும் காளப்பட்டி, விமான நிலையம், நேரு நகர், சரவணம்பட்டி ஆகிய இடங்களில் மழை பெய்தது. திடீரென பெய்த கோடை மழையால் வெப்பம் குறைந்தது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக பெரிய நாயக்கன் பாளையத்தில் 15 மில்லி மீட்டர் மழை பெய்தது. மேலும் கோவை தெற்கில் 14 மில்லி மீட்டரும், பீளமேட்டில் 3.40 மில்லி மீட்டரும், வேளாண்மை பல்கலைகழகத்தில் 1.80 மில்லி மீட்டர் மழை என மொத்தம் 34.20 மில்லி மீட்டர் பெய்தது.

மழை காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

Related Post


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup