அவசர காலங்களில் செயல்படுவது எப்படி? கோவையில் மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி

 Wednesday, March 14, 2018  09:13 AM

விபத்து மற்றும் அவசர காலங்களில், ஆபத்தான நிலையில் இருப்பவரை கோல்டன் ஹவர்ஸ் எனும் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்து வருவது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு அழைத்து வரப்படுபவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதும், முதலுதவி செய்வதும் அவசியம்.மருத்துவர்கள் இல்லாத இடங்களில், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்களின் பங்கு முக்கியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு வரும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் பொருட்டு, முதல் நிலை ஊழியர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என, சுகாதார துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை முதல்நிலை ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க தமிழக சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்ட, 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:விபத்தில் சிக்குபவர்களை பெரும்பாலும் பொதுமக்கள் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். பயிற்சி இல்லாதவர்கள் காயமடைந்தவரை ஆம்புலன்சில் ஏற்றும் போது மேலும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், உடனடி முதலுதவி அளிக்க முடியாமல், காயமடைந்தவருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால், மருத்துவ பணியாளர்கள் விரைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது. மூன்று நாட்கள் வழங்கப்படும் பயிற்சியில், அடிப்படை தகவல்கள் அனைத்தும் வழங்கப்படும். அவசர கட்டத்தில் வரும் நோயாளிக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் குறித்தும் பயிற்றுவிக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup