குழந்தைகளுக்கு சத்தான பாதாம் பால் செய்வது எப்படி

 Tuesday, March 13, 2018  04:59 PM

வளரும் குழந்தைகளுக்கு பாதாம் மிகவும் இன்றியமையாதது. இன்று குழந்தைகளுக்கு சத்தான பாதாம் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
பால் - ஒரு கப்,
பாதம் - 10,
முந்திரி - 5,
ஏலக்காய் - ஒன்று,
பனங்கற்கண்டுத்தூள் - தேவையான அளவு.


Vanavil NEw2
செய்முறை :

பாதாம், முந்திரியை சிறிது பாலில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

நன்றாக ஊறியதும் மிக்சியில் விழுதாக அரைத்து எடுக்கவும்.

அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரைத்த விழுது, பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி சூடாக பருகலாம்.

இரவில் தூங்குவதற்கு முன்பு பருக நல்ல தூக்கம் வரும். மறுநாள் தேர்வை சுறுசுறுப்பாக எழுத உதவும்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2