சிதிலமடைந்து வரும் 1200 ஆண்டு பழமையான கோவை-பரமேஸ்வரன் பாளையம் வெங்கடேசப் பெருமாள் கோயில்

 Tuesday, March 13, 2018  04:30 PM

மிக உயர்ந்த ஆன்மிகத் தத்துவங்களை கதைகளாகவோ, பக்திப் பாடல்களாகவோ, கோயில்களாகவோ விதைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். கோயில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல; கருங்கல்லும் சுண்ணாம்புச் சாந்தும் மட்டும் அல்ல. மந்திரச் செறிவு மிக்க சக்திப் பிரதேசம். கால ஓட்டத்தில் இயற்கையாலோ, அந்நிய படையெடுப்பாலோ ஆலயங்கள் பொலிவிழந்து போய்விடுகிறது. சமுதாயம் விழித்துக் கொள்ளும்போதுதான் அது மீண்டும் மலர்ந்து ஆன்மிக மணம் வீசுகிறது.

இப்படி ஒரு ஆலயம்தான் கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே, தேவராயபுரம்-பரமேஸ்வரன் பாளையத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் பெருமாள்முடி அடிவாரத்தில் இருக்கும் வெங்கடேசப் பெருமாள் கோயில். இந்தக் கோயில் தூண்கள், சிதிலமடைந்திருக்கும் இந்தக் கோயிலின் 1200 ஆண்டு
காலத் தொன்மையை, உன்னத, பொற்காலப் பெருமையை, மௌனமாய் விளக்குகின்றன. கி.பி. 800க்குப் பின் கங்க மன்னர்களைச் சோழர்கள் வென்று, கொங்கு நாட்டைக் கைப்பற்றிய போது இந்தத் திருக்கோயிலையும் சோழர்கள் சோழ மண்டலத்துடன் இணைத்துக் கொண்டார்கள்.

Custom3

கி.பி.1004 முதல்1045 வரை சூரிய-சந்திர கிரகணங்களால் ஏற்படும் தோஷத்தை நீக்கும் தலமாக இந்த ஆலயம் விளங்கி இருக்கிறது என்பதை முதலாம் கலிமூர்க்க விக்ரமன் என்னும் மன்னன் காலத்து கல்வெட்டு சொல்கிறது. கி.பி. 1265 முதல் 1285 வரை கொங்கு நாட்டை ஆண்ட மன்னன் வீரபாண்டியன் காலத்தில் கோயில் விரிவு படுத்தப்பட்டு திருப்பணிகள் மிகச் சிறப்பாக நடந்துள்ளன. கி.பி. 1350 வரை கேரள நாட்டின் சிற்றரசர்கள் வீரநாராயணன், கோகண்டன்ரவி, வீரகேரளன் ஆகியோர் திருப்பணி செய்ததாக கல் வெட்டு கதை சொல்கிறது.

விஜயநகரப் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் விஸ்வநாத நாயக்கன் தன் மனைவியின் விருப்பத்தை நிறை வேற்றும் வகையில் இந்த கோயிலைச் சீரமைத்து, விமானங்களுக்கு வெள்ளியாலும் தங்கத்தாலும் கலசங்கள் அமைத்து பெருமாளை ஆராதித்திருக்கிறான். இந்த ஆலயத் திருக்குளம் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. கருவறையில் எழிலோடு வீற்றிருக்கும் பெருமாளின் பேரழகைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. கோயில் சிதிலமடைந்திருந்தாலும் நாரணனின் அன்புக்கு மட்டும் எல்லையில்லை. வேண்டியது வேண்டியபடி கிடைக்கிறது. அத்தனைக்கும் காரணம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யந்திர மகத்துவமே என்கிறார்கள்.


Cusomt2

Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp1
Website Square Vanavil 1
Website Square Ad spp3
Website Square Vanavil2
Website Square Ad spp2