கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒருங்கிணைந்த விபத்து அவசர சிகிச்சை மையம்

 Tuesday, March 13, 2018  02:48 PM

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ஒருங்கிணைந்த விபத்து அவசர சிகிச்சை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 12 வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் விபத்து அதிகம் நடக்கும் இடங்களில் ஒருங்கிணைந்த சிறப்பு விபத்து அவசர சிகிச்சை மையம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் அருகில் உள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைநகரங்கள், மண்டலத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Websire custom Vanavil2

மேற்கு மண்டலத்தில் கோவை மட்டுமின்றி திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் தினமும் சுமார் 40 பேர் வரை சாலை விபத்தில் சிக்கி அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகின்றனர். இதனால், கோவை அரசு மருத்துவமனையில் இந்த மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்காக, மத்திய அரசு ரூ.10 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கான இடவசதி கோவை அரசு மருத்துவமனையில் குறைவாக இருக்கிறது. இதனால், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது: சிறப்பு ஒருங்கிணைந்த விபத்து அவசர சிகிச்சை மையம் 7,500 சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது. கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அடுத்தடுத்து பல்வேறு விரிவாக்க பணிகள் நடக்க இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ‘ட்ரோமா கேர்’ மருத்துவ கல்லுாரியில் அமைக்க பரிந்துரை செய்துள்ளோம். மருத்துவ கல்லுாரியில் அமைத்தால் புறநகர் பகுதியில் விபத்தில் சிக்குபவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க முடியும்.


Vanavil New1

Vanavil NEw2


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2
Website Square Vanavil 1