கோவையில் அமர்நாத் புனித யாத்திரைக்கு சுகாதார சான்றிதழ் வழங்கும் பணி

 Tuesday, March 13, 2018  02:46 PM

கோவை மண்டலத்தை சேர்ந்தவர்கள் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ள சுகாதார சான்றிதழ் கோவை அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருகிறது. அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூன் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை நடக்கிறது. இந்த யாத்திரை மேற்கொள்ள முன்பதிவு செய்ய வேண்டும். அனுமதி இல்லாமல் யாத்திரை மேற்கொள்ள முடியாது. யாத்திரைக்கான அனுமதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு வங்கி கிளைகள் மூலம் அளிக்கப்படுகிறது. யாத்திரை செல்ல அனுமதி பெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர் மூலம் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ் கட்டாயம் சமர்பிக்க வேண்டும். இதற்கான, முகாம் கடந்த 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு சான்றிதழ்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.


Custom3
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சவுந்திரவேல் கூறியதாவது:

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் சுகாதார சான்றிதழ் பெற கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். யாத்திரைக்கு செல்பவர்கள் வரையறை செய்யப்பட்ட உடல் தகுதி, வயது, அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சி, ரத்த அழுத்தம், இ.சி.ஜி., மலையேறுவதில் பயிற்சி உள்ளிட்டவை குறித்து பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது வரை 75 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Cusomt2

Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp1
Website Square Vanavil 1
Website Square Ad spp2
Website Square Ad spp3
Website Square Vanavil2