கோவை ஆனைமலையில் மலையேற்றத்திற்கு தற்காலிக தடை

 Tuesday, March 13, 2018  02:42 PM

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலைக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி தற்போது வரை 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளுக்குள் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரான கணேசன், நடைபயணமாக சுற்றுலாப் பயணிகள் காட்டுக்குள் செல்வது காவலர்களுடைய மேற்பார்வையில் தான் சென்று வருவதாக குறிப்பிட்டார்.

Vanavil NEw2

இருந்தாலும் தற்போதுள்ள நிலையை கருத்தில் கொண்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டிரக்கிங் போவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கொடைக்கானல் மலையில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பற்றி எரியும் காட்டு தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொடைக்கானல் வனசரகத்திற்குட்பட்ட எந்த இடத்திலும் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


Vanavil New1Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2