பூக்களும் மருத்துவ குணமும்

 Monday, March 12, 2018  09:36 AM

உலகில், 25 சதவீத மலர்களாவது மருத்துவ குணம் கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. எந்த மலரில் என்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்று பார்க்கலாம்.

பூக்கள் பலவும் மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையில், மலர் மருத்துவம் என்ற துறையே பிறந்துவிட்டது.

உலகில், 25 சதவீத மலர்களாவது மருத்துவ குணம் கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது, உடல்நலத்துக்கு நன்மை பயக்கிறது.


Custom3
உதாரணமாக, ரோஜாப்பூ, தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும். மல்லிகைப்பூ மனஅமைதிக்கு உதவும், கண்களுக்குக் குளிர்ச்சி தரும். செண்பகப்பூ வாதத்தைக் குணப் படுத்தும், பார்வைத்திறனை மேம்படுத்தும்.

பாதிரிப்பூ செவிக் கோளாறுகளைச் சீர்படுத்தும், செரிமான சக்தியை மேம்படுத்தும், காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும். செம்பருத்திப் பூ தலைமுடி தொடர்பான பிரச்சினைகளைச் சரிசெய்யும், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். மகிழம்பூ தலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும், பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட குறைபாடுகளை நீக்கும்.

வில்வப்பூ சுவாசத்தைச் சீராக்கும், காசநோயைக் குணப்படுத்தும். சித்தகத்திப்பூ தலைவலியைப் போக்கும், மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். தாழம்பூ நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும், உடல் சோர்வை நீக்கும். தாமரைப்பூ தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும், மனஉளைச்சலை நீக்கி அமைதி கொடுக்கும், தூக்கமின்மையைப் போக்கி, சீரான தூக்கத்தை அளிக்கும்.

கனகாம்பரப்பூ தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும். தாழம்பூ, மகிழம்பூ, சந்தனப்பூ, ரோஜாப்பூ, செண்பகப்பூ போன்ற மலர்கள் வாதம், கபம் போன்றவற்றைச் சரிசெய்யும் என்று மலர் மருத்துவ நிபுணர்கள் பட்டியல் இடுகிறார்கள்.


Cusomt2

Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp2
Website Square Ad spp1
Website Square Ad spp3
Website Square Vanavil2
Website Square Vanavil 1