மனதையும், உடலையும் குளிர்சியாக வைத்துக்கொள்ள - கேத்தரின் நீர்வீழ்ச்சி

 Friday, March 9, 2018  08:30 PM  2 Comments

இந்த நீர்வீழ்ச்சியை பற்றி நிறைய பேர்களுக்கு தெரிந்திருக்க கூடும்.. இவ்விடத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு..

கோத்தகிரி போகும் வழியில் கோத்தகிரிக்கு 8 கிலோ மீட்டர் முன்னதாக 'அரவேனு' என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தேயிலை காடுகளில் கீழ் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆண்டுக்கு எல்லா நாட்களிலும் தண்ணீர் மிக மிக குளிர்சியாக வந்துகொண்டு இருக்கும்,

கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் காப்பி பயிரிடப்படுவது துவங்கக் காரணமாக இருந்த M.D. காக்பர்ன் என்பவரது மனைவியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.

கோத்தகிரியில் முதலில் குடியேறியவர்களில் காக்பர்ன் தம்பதியரும் அடங்குவர். இது 250 அடி உயரத்திலிருந்து இரு நிலைகளாக விழும் நீர் வீழ்ச்சியாகும். மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி செல்லும் வழியில் அரவேணு என்ற இடத்தில உள்ளது. இந்த அருவியின் முழுமையான காட்சியைக்காண டால்பின் மூக்கு வியூ பாயிண்டிற்கு செல்ல வேண்டும். அருவியின் மேற்பகுதிக்கு சாலை வழியாகவும் செல்லலாம். இது நீலகிரி மாவட்டத்திலுள்ள இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். கேத்தரின் நீர் வீழ்ச்சி கோத்தகிரியில் இருந்து 29 கி.மீ. தொலைவில் உள்ளது. 'கேத்தேஹாட ஹள்ளா ' என்பது உள்ளூரில் வழங்கும் மொழியில் கேத்தரின் நீர் வீழ்ச்சியின் பெயராகும். இது 'பள்ளத்தாக்கின் ஆறு' என்று பொருள் படும்.சாலை வழியாக எளிதில் அடைய முடியும் என்பதால் கோத்தகிரிக்குச் செல்லும் எவரும் தங்கள் சொந்த வாகனத்திலேயே செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.

Vanavil NEw2

மனதையும்,உடலையும் குளிர்சியாக வைத்துக்கொள்ள இந்த பகுதிக்கு போகலாம்..

ஊட்டி,மற்றும் கோத்தகிரியில் கடும் வறட்சி ஏற்படும் சூழ்நிலைகளில் கூட இங்கு வறட்சி இன்றி தண்ணீர் வந்துகொண்டு இருக்கும்..வற்றாத அருவி ,வனத்துறையின் கட்டுபாட்டில் இவ்விடம் வராது என்பதால் எந்த தடைகளும் இன்றி சுதந்திரமாக குளித்து கொண்டாடலாம், பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் மிகுந்த கவனம் தேவை..குளிர்மையான சூழ்நிலையில் குளிரான நீரில் குளிப்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்சியை தரும், குற்றால அருவிகளை விட சிறந்த அருவி இந்த அருவி,
மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது ஊற்றுகளில் இருந்து உற்பத்தியாகும் அருவி.

இங்கு கடைகள் இல்லை என்பதால் அரவேனு பகுதிகளில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவைத்து கொள்ளவும்(உணவு,சிகரெட் மற்றும் இதர) ஒருமுறை சென்றுவந்தால் தெரியும் இவ்விடத்தின் அருமை..போகும் வழியில் தேயிலை தோட்டங்களின் அழகையும்,சுத்தமான காற்றையும் அனுபவிக்கலாம்.

இந்த அருவியில் இருந்து செல்லும் தண்ணீர் மேட்டுப்பாளையம் பாவனி ஆற்றில் கலக்கிறது... நண்பர்களுடன் செல்வதற்கு ஏற்ற இடம் ..மலை சிறுநாவல் பழமரங்கள் இவ்விடத்தில் அதிகமாக உள்ளது.


Vanavil New1



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Yuva Ykl commented on 1 year(s) ago
Nice
Rajadhurai Murugesan commented on 1 year(s) ago
superb

Website Square Vanavil2