முதலாளித்துவத்தை எதிர்த்து நின்ற சின்னியம்பாளையம் தியாகிகள்

 Friday, March 9, 2018  04:30 PM

வரலாற்றில் எத்தனையோ முக்கிய நிகழ்வுகளை கண்டுள்ளது கோவை நகரம். ஆனால், அவற்றில் ஒரு சில நிகழ்வுகளே, உலகறியச் செய்தவை. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் சின்னியம்பாளையம் தியாகிகளின் துணிவு. கோவையில், புகழ் பெற்ற பஞ்சாலைகளில் ஒன்று ரங்கவிலாஸ் மில். 1911ல் ஜின்னிங் ஃபேக்டரியாக தொடங்கப்பட்ட ரங்கவிலாஸ் ,1922ல் பெரும் நூற்பாலையாக வளர்ச்சியடைகிறது.

இதில், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நான்கு இளம் தொழிலாளிகள் பணிபுரிந்துவந்தனர். பஞ்சாலைகளில் நடக்கும் அட்டகாசங்கள், பெண்களுக்கு எதிராக நடக்கும் சீண்டல்களுக்கு எதிராக துணிவுடன் குரல் கொடுப்பார்கள். அதனால், 15 மணி உழைப்புக்கு, அவர்களுக்குக் கிடைத்த மாதச் சம்பளம் 15 ரூபாய்தான். இதில், ராஜி என்ற பெண் தொழிலாளியும் முக்கியப் போராளியாக இருந்துவந்தர். குறிப்பாக, பஞ்சாலைக்குள் நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக, தனிப்பட்டமுறையில் பெண்களைத் திரட்டி துணிச்சலோடு குரல் கொடுத்தவர் ராஜி.

Custom1

ஒருநாள், பணி முடிந்து ராஜி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் ராஜியைக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து, கொல்கிறது. இதையடுத்து, இந்தச் சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக பொன்னான் என்பவரை, அந்த 4 இளம் தொழிலாளிகளும் தேடிப்பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். பொன்னான் இறந்து போனார். இதைத்தொடர்ந்து, அந்த 4 பேரையும் பலிவாங்கும் சந்தர்ப்பத்திற்காக மில் நிர்வாகம் காத்துக்கொண்டிருந்தது. காவல்நிலையத்தில் இவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 4 தொழிலாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். 4 தொழிலாளிகளையும் விடுவிக்க கடுமையான சட்டப்போராட்டம் நடந்தது. இறுதியில், பெண் தொழிலாளிகளின் சீண்டலுக்கு எதிராகப் போராடிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.

1946-ம்ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். பெண்கள் கதறி அழுக, தொழிலாளர்கள் முழக்கம் விண்ணைப் பிளக்க, அவர்களின் இறுதி ஊர்வலம் பிரமாண்டமாக நடந்தது. சின்னியம்பாளையம் தியாகிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு, சி.ஐ.டி.யூ மற்றும் ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆசிரியர் காலனியிலிருந்து தியாகிகள் மேடை வரை பேரணி நடந்தது. கோவை மற்றும் திருப்பூரில் உள்ள ஸ்பின்னிங் மில்களில் பணிபுரியும் பெண்களுக்கு, இன்றும் பணியிடங்களில் பாலியல் தொல்லைள் பிரச்னை இருந்து வருகிறது. ஆனால், அந்த நிர்வாகங்களை எதிர்த்து நிற்க சின்னியம்பாளையம் தியாகிகளைப் போன்ற துணிவுமிக்க போராளிகள் நம்மிடம் இல்லை.


Cusomt2

Custom3


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp1
Website Square Vanavil 1
Website Square Vanavil2
Website Square Ad spp2
Website Square Ad spp3