ஒரு புதுவிதமான உணர்வை தரும் - கேரள குண்டு வாட்டர்பால்ஸ்

 Thursday, March 8, 2018  08:30 PM  1 Comments

இந்த அருவியானது மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் கல்குண்டு என்ற இடத்தில் அமைந்துள்ளது..கோவையில் இருந்து சுமார் 120 கிமி தொலவில் அமைந்துள்ளது.

காடுகளின் அழகை ரசித்து கொண்டே செல்ல விரும்புவர்கள் ஆனைகட்டி- அட்டபாடி மலை வழியாக மன்னார்காடு சென்றடைந்து அங்கிருந்து இந்த பகுதிக்கு செல்லலாம்..அல்லது கோவையில் இருந்து பாலாக்காடு பைபாஸ் சாலை வழியாக மன்னார்காடு வந்து அங்கிருந்து இந்த அருவிக்கு செல்லலாம்...
கல்கூண்டு வந்தடைந்து அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஜீப் மூலமாக சுமார் 5 கிமி தொலைவு கரடு முரடான ஏற்றமான ரப்பர் தோட்ட காடுகளின் வழியாக இந்த அருவியை நாம் அடையலாம்..ஜீப் கட்டணம் நபருக்கு ரூ.15 ..அருவிக்கு செல்ல நுழைவு கட்டணம் ரூ.20 என வசூலிக்கபடுகிறது

இயற்கையாகவே ஒரு நீச்சல் குளம் போல அமையப்பெற்ற இந்த அருவியானது சைலண்ட் வேலியின் பின்புறத்தில் அமைந்துள்ளது..எப்போதும் குளிர்ந்த நீராக இருக்கும் இந்த அருவி நீரானது மூலிகை தன்மை கொண்டது..கேரளாவில் மழை இல்லாத மாதங்களில் இங்கு செல்லலாம்..மழைகாலங்களில் இங்கு சென்றால் அதிக அளவு தண்ணீர் வரும் அதனால் அந்த நீச்சல் குளத்தில் குளிக்க முடியாது மாறாக அதற்கு மேல் பகுதியில் உள்ள அருவியில் குளிக்கலாம்.. இந்த அருவியின் நுழைவுவாயிலில் இருந்து ஒரு பாதை செல்லும் அந்த பாதையில் இருந்து சுமார் 1 கிமி தொலைவில் காட்டுபகுதியில் ஒரு காட்டேஜ் உள்ளது..

நீர்வரத்து குறைவாக இருக்கும் காலங்களில் இந்த அருவியின் ஒட்டுமொத்த அழகையும் குளித்து ரசிக்கலாம்...

இந்த அருவிக்கு சென்றுவிட்டு திரும்பவும் கருவரகுண்டு வந்தடைந்து நியூ அம்மாரம்பலம் காடுகள் வழியாக கூடலூர் வந்து ஊட்டியை சென்றடையலாம்....
மேலும் கருவரக்குண்டில் இருந்து கல்குண்டு செல்லும் வழியில் சில வாய்கால்கள் ஒடுகின்றன...தெளிவான நீராக ஓடும் இங்கு குளிக்கலாம்...


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


Angappan e commented on 6 month(s) ago
Thankyou