கோவையில் 400 ஆண்டுகள் பழமையான ராஜ வீதி, சௌடம்மன் கோவில்

 Friday, March 2, 2018  08:30 PM

பழைய சௌடம்மன் கோவில் ,ராஜ வீதி , 5 முக்கு ,கோவை

இன்று இக்கோவிலுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது, 5 அல்லது 6 பக்தர்கள் மட்டுமே இருந்தனர் . அமைதியான தரிசனம் ............ பழமையும் ,புதுமையும் நிறைந்த கட்டிட அமைப்பு . மூலவராக சௌடாம்பிகையும் , இராமலிங்கேசரும் ......ராமலிங்கரின் சன்னதி கிழக்கு முகமாகவும் , அம்பாள் சன்னதி வடக்கு முகமாகவும் ஒரே இடத்தில் வித்தியாசமாக அமைந்துள்ளது .

கோவிலில், முன்னவராக கணபதியும் , அதற்க்கு அடுத்து ஹனுமான் ,ஹயக்ரீவர்,தேவலமஹரிஷி ,சப்தமாதாக்கள் , சப்த கன்னிகள் , காலபைரவர், சனீஸ்வரன், சூரிய ,சந்திரர்கள் , நாயன்மார்கள் ,தக்ஷிணாமூர்த்தி ,கன்னிமூல கணபதி ,லிங்கோத்பவர்,சண்டிகேஸ்வரர், துர்கை,முருகன் ,பெருமாள் மற்றும் மூலவராக ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் மற்றும் ராமலிங்கேசர் .

ஒரு நாக லிங்க பூ மரமும் செழிப்புடன் உள்ளது .

Custom1

இக்கோவில் அமைப்பு மற்றும் அதன் காலம் குறித்து அங்கிருந்த கோவில் நிர்வாகியிடம் கேட்டபோது , இக்கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது என தெரிவித்தது வியப்பாக இருந்தது ( அதாவது கி .பி .1617 - க்கு முன் ) நம் முன்னோர்கள் ஆந்திராவில் இருந்து இங்கு வந்து 400 ஆண்டுகளுக்கு மேலாகிறது என்பதை இதன் மூலம் அறியலாம் .

2016-ம் ஆண்டு பெரிய பண்டிகையும் , கும்பாபிஷேகமும் சிறப்பாக நடை பெற்றது . இனி 12 ஆண்டுகள் கழிந்து அடுத்த பண்டிகையும் ,கும்பாபிஷேகமும் நடைபெறலாம் . கோவில் நிர்வாகத்தில் பல சிக்கல்களும் இக்கட்டுகளும் உள்ளது . பலராலும் வழக்குகளும் போடப்பட்டும் , எப்படியோ அத்தனையும் கடந்து சிறப்பாக இந்த கும்பாபிஷேகம் நடைபெற்றது .கோவில் நிர்வாகத்தில் இடம் பிடிக்க பலரும் முயல்வதாக பக்தர் தெரிவித்தார் .

கோவில் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கோவில் மற்றும் அதன் கட்டுமானம் உறுதியாகவே இருந்தது . அங்கிருந்த ஒரு RSJ pole ஒன்றில் Dorman & Co Ltd., Middleborough,England, என எழுதி இருந்ததை காண முடிந்தது .

இப்போதெல்லாம் தேவாங்க குல மக்கள் சரியாக கோவிலுக்கு வருவதில்லை என ஒருவர் வருத்தப்பட்டார் . கோவில் நகரத்தின் பிஸியான பகுதியில் உள்ளதால் ,மிகுந்த வாகன நெரிசல் உள்ளதால் ,பார்க்கிங் பிரச்னையால் பலரும் வருவதில்லை என அவர் தெரிவித்தார் , மேலும் , தேவாங்க குல மக்கள் அவரவரின் குல தெய்வங்களுக்கு என பல இடங்களில் கோவில் கட்டி அங்கே சென்று வருவதால் , இந்த பழைய சௌடம்மனை வணங்குவது குறைந்துவிட்டது என்பது வருத்தப்படவேண்டிய விஷயம் .


Cusomt2

Custom3


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Vanavil2
Website Square Ad spp3
Website Square Vanavil 1
Website Square Ad spp1
Website Square Ad spp2