ஒரே நாளில் பிரச்சனையை தீர்த்து வைத்த கோவை மாவட்ட ஆட்சியர்

 Friday, May 22, 2020  03:22 PM

கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வந்து 10-ம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு கேரளா அரசு அதிகாரிகள் தடை விதித்ததை அடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு அனுமதி வாங்கித்தந்துள்ளார்.


yt_custom
கேரளா எல்லை பகுதிகளான அட்டப்பாடி போன்ற கிராமங்களில் வாழும் 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்த சின்னத்தடாகம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தான் தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தமிழகத்திற்கு வர கேரளா அதிகாரிகள் தடை விதித்தனர்.

இந்த தகவல் கோவை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு சென்றது. இந்தப் பிரச்சினையில் உடனடியாக தலையிட்ட ஆட்சியர் கு. ராஜாமணி அவர்கள், பாலக்காடு மாவட்ட ஆட்சியருடன் பேசி அனுமதி உத்தரவு வாங்கித் தந்துள்ளார். இதனால் மாணவர்கள் தடையின்றி தமிழகத்திற்குள் வந்து தேர்வு எழுத முடியும்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Twitter_Right
Telegram_Side
mobile_App_right
Insta_right