இன்றைய தினம் -- ஏப்ரல் 7

 Tuesday, April 7, 2020  08:16 AM

இன்று உலக சுகாதார தினம்!

உலக நலவாழ்வு நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக நலவாழ்வு நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

1935 – எஸ். பி. முத்துராமன் தமிழ்த்திரைப்பட இயக்குனர் பிறந்த தினம்

1962 – ராம் கோபால் வர்மா, இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் பிறந்த தினம்

1962 – கோவை சரளா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்

1971 – கே. சுப்பிரமணியம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர் (பி. 1904) நினைவு தினம்


yt_middle
1827 – ஆங்கிலேய மருந்தியலாளர் ஜோன் வோக்கர் தான் முந்தைய ஆண்டு கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.

1927 – முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.

1928 – வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.

1955 – வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

1964 – ஐபிஎம் தனது சிஸ்டம்/360 ஐ அறிவித்தது.

2007 – தமிழ்நாட்டில் சென்டூரில் நெடுஞ்சாலை அமைப்புக்கென கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் அடங்கிய வாகனம் ஒன்று வெடித்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

1998 – எஸ். வி. வெங்கட்ராமன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1911) நினைவு தினம்


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
Telegram_Side
fb_right
mobile_App_right