இன்றைய தினம் - ஏப்ரல் 5

 Sunday, April 5, 2020  08:14 AM

இந்திய கடல்சார் தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5ஆம் தேதி தேசிய கடல்சார் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்குக் வெளிக்காட்டும் வகையில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 5 ஆம் நாளன்று இந்தியாவின் முதல் நீராவிக் கப்பல் (எஸ்.எஸ்.லாயல்டி) மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்றது. அதன் நினைவாக 1964 ஆண்டு முதல், ஏப்ரல் 5ம் நாளானது தேசிய கடல்சார் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1977 – ஏ. பி. நாகராசன், தமிழகத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், கதையாசிரியர், வசனகர்த்தா (பி. 1928)

1792 – அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் முதற் தடவையாக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினார்.

1804 – முதற்தடவையாக விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது ஸ்கொட்லாந்தில் பதிவானது.

1879 – பொலிவியா, மற்றும் பெரு மீது சிலி போரை அறிவித்தது. பசிபிக் போர் ஆரம்பமானது.

yt_middle

1932 – பின்லாந்தில் மதுவிலக்கு கொள்கை முடிவுக்கு வந்தது.

1956 – பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அதிபருடன் போரை அறிவித்தார்.

1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார்.

1923 – எம். சாரதா மேனன், இந்திய மனநல மருத்துவர் பிறந்த தினம்

1957 – ராம. அழகப்பச் செட்டியார், இந்திய தொழிலதிபர் (பி. 1909) நினைவு தினம்yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
mobile_App_right
Insta_right
fb_right
Telegram_Side