கோவையில் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 431 ஆக உயர்வு

 Thursday, March 26, 2020  06:49 AM

கோவையில், இதுவரை மொத்தம் 431 பேரை, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக, சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. அவர்களின் வீடுகளில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோவையிலும் அதி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, தற்போது 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள், தாமாகவே முன்வந்து சுகாதார துறை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிப்பதால், தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.

yt_middle

கோவை மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி இதுவரை 431 நபர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி, சுகாதார துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்தேகப்படும்படியான அறிகுறிகள் தென்பட்டால், 108 ஆம்புலன்ஸ் சேவை அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலக எண்களான 1077 மற்றும் 0422-230114 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
mobile_App_right
Telegram_Side
Twitter_Right
Insta_right