சிக்கனத்திற்கான எளிய வழிகள்...

 Thursday, March 19, 2020  04:03 PM

* பணத்தை மிச்சமாக்குவதற்கான வழிகளை கண்டுபிடியுங்கள்; அது ஒரு விளையாட்டு போல சுவாரஸ்யமாக இருக்கும். இதனால், பணம் மிச்சமாவதுடன் நேரமும் மிச்சமாகும்; வெற்றி பெற்ற ஒரு உணர்வும் கிடைக்கும்

* செலவுகளை திட்டமிடுங்கள். மளிகைப் பொருட்களை வாங்கும் போது பார்த்ததை வாங்குவதால் செலவு கூடுதலாகிறது. இதை தவிர்க்க, மாதம் ஒரு முறை மட்டுமே மளிகைப் பொருட்களை வாங்கச் செல்லுங்கள்

* குடும்பச் செலவுகளுக்கு பட்ஜெட் முக்கியம். உங்களுக்கான மாத பட்ஜெட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆனால், மாதச் செலவுகளை கணக்கிடும் போது நமது கணிப்பு பெரும்பாலும் தவறாக அமைகிறது என்பதை உணர்ந்து கணக்கிடுங்கள்


yt_middle
* எல்லா பொருட்களையும் முடிந்த அளவுக்கு அவற்றை பயன்படுத்திய பிறகே மாற்ற வேண்டும். பழைய பொருளை கொடுத்து புதிய பொருளை கொஞ்சம் விலை குறைந்து வாங்குவதை விட, பழைய பொருளை விற்று விட்டு, நல்ல நிலையில் உள்ள பயன்படுத்திய பொருளை வாங்கவும்

* வீட்டு வசதி மற்றும் எரிசக்தி போன்றவற்றில் சிக்கனமான அணுகுமுறை தேவை

* கடன் ஒரு பிரச்னை என உணர்ந்து செலவை கட்டுப்படுத்துங்கள்; கிரடிட் கார்டுகள் வேண் டாம். வீட்டில் உள்ள பொருட்களை விற்க முடியுமா என பாருங்கள். மேலும் வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்துங்கள். கடனை சமாளிக்கும் திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள்

* பணத்தின் அருமையை குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். அவர்கள் கையில் செலவுக்கு பணத்தை சும்மா கொடுக்காதீர்கள். பணத்தை பெற முடியாது சம்பாதிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கான படிகள் (அலவன்ஸ்) மூலம் புரிய வையுங்கள்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Twitter_Right
mobile_App_right
fb_right
Telegram_Side