கோவையில் 155 ஆண்டுகள் பழமையான - போஸ்ட் ஆபிஸ்

 Friday, February 21, 2020  03:38 PM

நம் நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆங்காங்கே குடியேறியபோது, கோவையில் குளுமையான போத்தனூரில் குடியேறினர். அந்த வரலாற்றின் அடையாளச் சின்னமாக ஆங்கிலோ இந்தியன் சர்ச் இங்கு உள்ளது. ஆங்கிலோ இந்தியர்கள்தான் ரயில்வே பணியில் மிகுதியாகப் பங்கெடுத்தனர். கோவையில் ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வசிப்பதும் போத்தனூரில்தான்.

கோவை மாவட்டத்தின் முதல் ரயில் நிலையமும், ரயில்வே பயிற்சிப் பட்டறையும், ரயில்வே பணிமனையும் போத்தனூரில் அமைந்தன. ரயில் நிலையங்கள் எங்கெல்லாம் அமைந்தனவோ, அங்கெல்லாம்தான் அஞ்சலகங்களும் அமைக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் ரயில் நிலையம் உட்பட அனைத்து வசதி களும் போத்தனூரில் 1.10.1865-ல் உருவாக்கப்பட்டது. ஒரே இடத்தில், சொந்தக் கட்டிடத்தில் இயங்கும் அஞ்சலகமாக இது விளங்குகிறது.


yt_middle
கோவை கோட்டத்தில் 2 தலைமை தபால் நிலையங்கள், 82 இலாகா தபால் நிலையங்கள், 97 கிளை அஞ்சலகங்கள் இயங்கி வருகின்றன. சொந்தக் கட்டிடத்தில் இயங்கிவரும் தபால் நிலை யங்கள் 12.

100 ஆண்டுகளைக் கடந்த அஞ்சலகங்கள் போத்தனூர் உட்பட 3 மட்டுமே. 1908-ல் லாலி ரோடு வேளாண் கல்லூரி அஞ்சலகமும், 1914-ல் கோவை கடைவீதி அஞ்சல கமும் தொடங்கப்பட்டன. மூத்த அஞ்சலகமான போத்தனூர், 155 வயதை எட்டியுள்ளது.

- ஓய்வுபெற்ற மூத்த அஞ்சலக அதிகாரி ஹரிஹரன்






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
Twitter_Right
fb_right
mobile_App_right
Insta_right