போலி தகவல்களை சுட்டிக்காட்ட ட்விட்டரில் புதிய அம்சம்

 Friday, February 21, 2020  03:10 PM

ட்விட்டர் சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்களை வாடிக்கையாளர்களே சுட்டிக்காட்ட புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

ட்விட்டர் தளத்தில் பரப்பப்படும் போலி தகவல்களை பயனர்களே சுட்டிக்காட்டும் புதிய அம்சத்தினை அந்நிறுவனம் சோதனை செய்கிறது. புதிய அம்சம் கொண்டு பயனர்கள் போலி தகவல்களை பிரகாசமான நிறங்களை கொண்டு சுட்டிக்காட்ட முடியும்.

'ஆயிரக்கணக்கான ட்வீட்களில் பரவும் போலி தகவல்களை கண்டறிய பல்வேறு வழிமுறைகளை ட்விட்டர் தொடர்ந்து சோதனை செய்து வருகிறது. அந்த வரிசையில் பயனர் வழங்கும் தகவல்களை கொண்டு இயங்கும் வகையில் புதிய அம்சம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. போலி தகவல்கள் மிக முக்கிய பிரச்சனை ஆகும், இதனை எதிர்கொள்ள பல்வேறு வழிமுறைகளை தொடர்ந்து சோதனை செய்வோம்.' என ட்விட்டர் தெரிவித்துள்ளது.

yt_middle

ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதள நிறுவனங்கள் போலி தகவல்கள் மற்றும் செய்திகளை தங்களது தளங்களில் இருந்து நீக்க கடும் அழத்தத்தை பெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களில் இந்நிறுவனங்கள் போலி செய்திகளை எதிர்கொள்ள புதிய அம்சங்களை தங்களது தளங்களில் அறிமுகம் செய்து வருகின்றன.

ஆபத்தை ஏற்படுத்தும் தகவல்கள் மற்றும் மீடியா ஃபைல்கள் அடங்கிய ட்விட்களில் எச்சரிக்கை தகவல் இடம்பெற செய்வதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.

Source : Maalaimalar


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
mobile_App_right
fb_right
Insta_right
Telegram_Side