வெயில் காலத்தில் உண்ணவேண்டிய உணவுகள் என்னென்ன?

 Thursday, February 20, 2020  03:37 PM

மதிய உணவில், வெள்ளரி, தக்காளி, வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகள் சேர்ந்த அல்லது ஒரு காய்கறி சேர்க்கப்பட்ட ரைத்தா சாப்பிடுவது நல்லது. இதில் கொத்துமல்லியும் அவசியம். இதனை சாப்பிடுவதால், வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகள் குறையும்.

கார உணவு வகைகளைத் தவிர்த்தல் நலம். காரக் குழம்பு வைத்தே ஆக வேண்டும் என்றால், வெந்தயக் கீரை அல்லது வெந்தயக் குழம்பு வைக்கலாம். வெண்டைக்காய் போன்ற குளிர்ச்சியாக காய்கறிகளை சேர்த்து காரக்குழம்பு வைக்கலாம். இதனால் காரக் குழம்பின் உஷ்ண பாதிப்பு குறையும்.

அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில், ஊறவைத்த வெந்தயம் அல்லது வெந்தயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு, கோடைக் காலம் நோயை அதிகரிக்கும் காலமாக அமையும். எனவே, இவர்கள் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சுகம் பெறலாம்.


yt_middle
நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய், கோஸ், தக்காளி போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

மதியம் 11 மணியளவில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஒரு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.
கோடைக் காலத்தில் அதிக வியர்வை மூலம் உப்பு வெளியேறுவதால் உப்பு கலந்த பண்டங்கள் அன்றாட உணவில் இடம்பெறுவது நல்லது.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் தன்மை கொத்துமல்லிக்கு உள்ளது. எனவே, வீட்டில் சட்னி அல்லது துவையல் அரைக்கும் போது, ஒரு கைப்பிடி கொத்துமல்லி மற்றும் கருவேப்பிலையை சேர்த்து அரைத்தால் சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. இந்த முறையை எந்த பருவ காலத்துக்கும் பயன்படுத்தலாம்.

எண்ணெய் சேர்த்து செய்யும் பண்டங்களை வெயில் காலங்களில் குறைத்துக் கொள்ளலாம். பூரி, வடை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால் வெயிலில் மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
mobile_App_right
fb_right
Telegram_Side
Twitter_Right