உழவர் கடன் அட்டை பயன்கள் என்ன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்...

 Tuesday, February 18, 2020  11:39 AM

உழவர் கடன் அட்டைகளை விவசாயிகள் பயிர் சாகுபடி செய்வதற்கும், கால்நடை வளர்ப்பிற்கும், மீன் வளர்ப்பிற்கும் பெற்றுக்கொள்ளலாம். பயிர் சாகுபடி பரப் பளவு மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து, நடைமுறை மூலதனத்தின் அளவுக்கேற்ப கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் விவசாயி ஒருவர் ஈட்டுறுதி இல்லாமல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

5 ஆண்டு செல்லத்தக்கது

yt_middle

மேலும் 7 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். உரிய காலத்திற்குள் கடன் தொகையை திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டித்தொகை சலுகையாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். 4 சதவீத வட்டி மட்டுமே செலுத்தினால் போதுமானது. உழவர் கடன் அட்டை பெற உரிய விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, நிலஉரிமை ஆதாரம் மற்றும் வங்கி சேமிப்புகணக்கு முதல் பக்க நகல் ஆகியவற்றை கொடுத்து 2 வார காலத்திற்குள் பெற்று கொள்ளலாம். உழவர் கடன் அட்டை 5 ஆண்டு வரை செல்லத்தக்கது.

எனவே அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் கடன் அட்டை பெற்று இடுபொருட்கள் தேவையினை பூர்த்தி செய்து உற்பத்தியை பெருக்கலாம். எனவே உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பத்துடன் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை அணுகி ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு புத்தகம், நில ஆவணங்கள் போன்ற உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கடன் அட்டையை பெற்று பயனடையலாம்.


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
fb_right
Insta_right
Telegram_Side
mobile_App_right