கணவன் மனைவி உறவை அழிக்கக் கூடிய 5 செயல்கள்!!

 Friday, January 24, 2020  02:44 PM

இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமாக பலப்பட வேண்டிய உறவு கணவன் மனைவி உறவுதான். முதலில் கூட்டுக் குடும்பம் பிரிந்தது. கணவன், மனைவி, குழந்தைகள் என்ற ஒரு குடும்ப கட்டமைப்பு ஏற்பட்டது.

இப்போது சோஷியல் மீடியாக்களின் விளைவாலும், தொழில் நுட்ப வசதிகளல் வந்தபின், கணவன் மனைவி உறவே இப்போது கேள்விக்குரியதாகிறது.

கணவன் ஒரு பக்கம் அலைபேசியுடனும். மனைவி ஒருப் பக்கம் அலைபேசியுடனும் போதாதற்கு ஃபேஸ்புக் ட்வ்ட்டர் என சமூக வலைதளங்களும் சேர்ந்து கணவன் மனை இருவரிடமும் இருந்த நெருக்கத்தை குறைத்து விடுகிறது. புரிதல் இல்லாமலும் ஒரு பாண்டிங் இல்லாமலும் அவர்களின் உறவில் பல பல புது புது சிக்கலல்கள் உண்டாக்குகின்றன.

கூடுமானவரை வீட்டிற்குள் இருவரும் இருக்கும்போது அலைபேசிக்கு இடம் கொடுக்காதீர்கள். பலருடைய வாழ்க்கையில் இதனாலேயே பிரச்சனைகளை கொண்டு தருகின்றது.

இது தவிர்த்து வேறு என்ன செயல்கள் எல்லாம் கணவன் மனைவி உறவினை பாதிக்கின்றன என பார்க்கலாம்.

அடுத்தவர் என்ன நினைப்பார்?

தங்களுடைய கணவனையோ, மனைவியையோ அக்கறையாக கவனித்தால் அடுத்தவர் தப்பாக நினைப்பாரோ, அம்மா அப்பா கோபப்படுவார்களோ என நினைத்தே பாதி வருஷம் நிறைய பேர் தங்களுடைய பர்சனல் மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.

இதை விட முட்டாள்தனமான நினைப்பு வேறெதுவும் இல்லை. அடுத்தவர்க்காக எதையெல்லாம் விட்டுக் கொடுக்கலாம் என அளவு கோல் உள்ளது. தங்களுடைய வாழ்க்கை இணைக்கு அன்பை பகிராமல் ஆயுசுக்கும் திருட்டுத்தனமாக அன்பை தருவதெல்லாம் டூ மச் பாஸ்.

yt_middle

குறை கூறுவது :

எடுத்ததெற்கெல்லாம் குறை கூறும் ஆட்கள் நம்ம ஊர்ல பஞ்சமே இல்ல. குழந்தை தவறு செய்தால் கூட கணவன், மனைவி மாறி மாறி ஒருவரை மற்றொருவர் குறை கூறுவது இருந்தால் அனுமார் வால் போல் இதற்கு முடிவு இருக்காது. இறுதியில் இருவருக்குள்ளும் வெறுப்புதான் மீதி இருக்கும்.

அதிகப்படியான கட்டுப்பாடு :

ஏன் அங்க போற. இத செய்யாத.. இந்த ட்ரெஸ் போடாத. அவர்ங்ககிட்ட ஏன் பேசற என கணவ்னோ மனைவியோ அதிகமாக தங்கள்து இணைக்கு கட்டுப்பாடு விதித்தால், அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் மறைந்து விரிசல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

பிரச்சனைகளை ஒதுக்குவது

உங்கள் கணவனோ, மனைவியோ ஒரு பிரச்சனையை சொல்லும்போது அதனைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது. ஒருவர் சொல்லும்போது செவி கொடுத்து கேட்காமல் இருந்தால், எங்கு எவர் கேட்கிறார்களோ அந்தப் பக்கம் குரல் சாய்ந்துவிடும். பின்னர். கணவன் வீட்டுக்கு வரலை. மனைவி ஓடிப் போயிட்டா என கூச்சல் போடுவதில் ப்ரயோசனமில்லை.

செக்ஸ் :

கணவன் மனைவி என்று வரும் போது அதில் அவர்களிய மிக அன்னியோனியமாக வைப்பது செக்ஸ் மட்டுமே . கவனோ மனைவியோ அதில் ஈடுபாடில்லாத போது, பிரச்சனைகள் வேறு ரூபத்தில் மறைமுகமாக வெடிக்கும். முறையற்ற உறவுகள் இதனால்தான் உண்டாகிறது. அதோடு. மனைவிக்கு பிடிக்காமல் உங்களுக்கு தேவைப்படும் சமயத்தில் எல்லாம் அவர்களிய படுக்கைக்கு அழைப்பதும் அவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Insta_right
Twitter_Right
Telegram_Side
mobile_App_right
fb_right