ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் மேம்பாலம் மீது சென்ற பொள்ளாச்சி தனியார் பேருந்துகள் பொதுமக்களால் சிறைபிடிப்பு

 Thursday, January 23, 2020  09:39 AM

பொள்ளாச்சியில் இருந்து வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் நிற்காமல் மேம்பாலம் மீது சென்றதால் பொதுமக்களால் இன்று காலை சிறைபிடிக்கப்பட்டது.

இன்று (23-01-2020) காலை 8 மணி அளவில் பொள்ளாச்சியில் இருந்து வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள சேவை சாலை வழியாக வராமல் மேம்பாலம் மீது சென்றதால், கீழே பேருந்துக்காக நின்ற பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். இதனால் மேம்பாலம் முடியும் இடத்தில் அவ்வழியாக நிற்காமல் வந்த 3 பேருந்துகளை பயணிகள் சிறைபிடித்தனர். அப்பேருந்து ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


yt_custom
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு தரவேண்டும் என்று பேருந்துகளை அனுமதிக்க மறுத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு இதற்கு அதிகாரிகளிடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்த பிறகே பேருந்துகள் விடுவிக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதியில் சம்பவத்தில் ஈடுபட்டிருந்த பூபாலன் என்பவர் கூறியதாவது..

கோவை பொள்ளாச்சி தனியார் பேருந்துகள் பல நேரங்களில் மேம்பாலம் மேலே தான் செல்கின்றன. கீழே சேவை சாலையில் பேருந்துக்காக காத்துநிற்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். காலை நேரங்களில் மாணவர்களும் பணிக்கு செல்வோரும் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. கோவையில் இருந்தோ பொள்ளாச்சியில் இருந்தோ பேருந்தில் ஏறும்போது ஒத்தக்கால்மண்டபம் ஸ்டாப்பில் நிற்காது என்றுதான் சொல்கின்றனர். அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள சேவை சாலையில் தான் வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, இருப்பினும் எந்த தனியார் பேருந்தும் அதனை கடைபிடிப்பதில்லை, இதற்கு போக்குவரத்து அதிகாரிகள் நிறைந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறினார்.


yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Telegram_Side
mobile_App_right
Insta_right
Twitter_Right