நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோராக இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.


Source: dinamani
 Tuesday, January 21, 2020  12:57 PM

இதனைப் படித்துப் பாருங்கள். இதில் நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோராக இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

* குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டி நெறிகள் சொல்லப்படுகின்றன அவை:

குயவர் (Potter): பெற்றோர் தொழில் திறன் மிக்க குயவர் போல் செயல்படவேண்டும். மண்ணைப் பிசைத்து, பக்குவப்படுத்தி அழகிய, கலைநயமிக்க மண் பாண்டங்களை உருவாக்குவது போன்று சமூகத்துக்குப் பயன்தரக் கூடிய சிறந்த குடிமகனாக குழந்தையை வளர்க்க வேண்டும்.

தோட்டக்கரார் Gardener மண்ணை சீர்படுத்தி விதை விதைத்து, தண்ணீர் ஊற்றி, பராமரித்து, களை எடுத்து, மரமாகி காய் காய்த்து கனி கிடைப்பது போல் குழந்தை நல் முறையில் வளர்வதற்கு உகந்த சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். உடலுக்கும் உள்ளத்துக்கும் வளம் தரக்கூடிய சத்துப் பொருள்களை வழங்கவேண்டும். அவர்களது வளர்ச்சிக்குத் தடையாக உள்ள தீய விஷயங்களை நீக்கி ஒரு தோட்டக்காரர் போல் பெற்றோர் செயல்பட வேண்டும்.

yt_middle

வழிகாட்டி: குழந்தைக்கு நல்ல வழிகாட்டியாக நல்ல ஆசானாக இருந்து நல்லது எது - கெட்டது எது, நற்குணங்கள் எவை, தீய குணங்கள் எவை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். வளைந்து கொடுக்கும் தன்மை. விட்டுக்கொடுக்கும் தன்மை, ஒட்டி வாழும் தன்மை ஆகியவற்றை குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும். அதே வேளையில் நமது விருப்பு - வெறுப்புகளை அவர்களிடம் திணிக்கக்கூடாது.

ஆலோசகர்: குழந்தைக்கு நல்ல ஆலோசகராக இருக்கவேண்டும். நெருக்கடியான நேரங்களில் எப்படி செயல்படவேண்டும். உணர்ச்சிகளை எவ்வாறு சமநிலையில் வைத்திருக்கவேண்டும். வெற்றி - தோல்வி கையாளும் பக்குவம் எல்லாவற்றையும் சொல்லிக் கொடுங்கள். வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுங்கள்.

ரோல் மாடல் (Roll Model): உங்கள் குழந்தையின் நல்லது. கெட்டது எல்லாவற்றுக்கும் நீங்கள்தான் காரணம். நீங்கள் சிகரெட் பிடித்தால் உங்கள் குழந்தையும் சிகரெட் பிடிக்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் பொய் சொன்னால் உங்கள் குழந்தையும் பொய் சொல்லும். மொத்தத்தில் உங்கள் குழந்தைக்கு நீங்கள்தான் ரோல் மாடல். அதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள தவறுகளை, குறைகளைச் சரி செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள், உங்கள் குழந்தை இச் சமூகத்தை வழி நடத்தும் குழந்தையாக வளரும்.Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Insta_right
mobile_App_right
Telegram_Side
Twitter_Right