இன்றைய தினம் - ஜனவரி 14

 Tuesday, January 14, 2020  06:30 AM

போகிப்பண்டிகை

மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக குறிப்பிடுகிறார்கள். பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் 'போக்கி' என்றனர்.

1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது.

1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

1932 – தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1998 – ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.2005 – சனிக் கோளின் டைட்டான் நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

2011 – துனீசியப் புரட்சி: தூனிசியாவின் அரசுத்தலைவர் பென் அலி சவூதி அரேபியாவிற்குத் தப்பி ஓடினார். அரேபிய வசந்தம் ஆரம்பமானது.

1915 – ஹொன்னப்ப பாகதவர், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகர், பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர் (இ. 1992) பிறந்த தினம்

1917 – க. வெள்ளைவாரணனார், தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (இ. 1988 பிறந்த தினம்

1918 – கே. முத்தையா, தமிழக விடுதலைப் போராட்ட வீரர், இடதுசாரி, எழுத்தாளர் (இ. 2003) பிறந்த தினம்

1937 – சோபன் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2008) பிறந்த தினம்

1951 – ஓ. பன்னீர்செல்வம், துணை முதல்வர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பிறந்த தினம்

1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர், அரசியல்வாதி (பி. 1860) நினைவு தினம்

2000 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920) நினைவு தினம்

2017 – சுர்சித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி (பி. 1925) நினைவு தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1