வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு

 Monday, December 30, 2019  01:50 PM

கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை சமீப நாட்களாக அதிகரித்துள்ளது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துவதால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.



கோவை, ஆழியாறு அணை மற்றும் வால்பாறை பகுதிகளிகளுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வால்பாறையில் காலை மற்றும் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக வீசிய போதிலும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். குரங்கு அருவி மற்றும் வால்பாறை பகுதிகளில் அவர்கள் கொண்டுவரும் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கிடைக்காத காரணத்தால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இனி பொங்கல் மற்றும் கோடை விடுமுறைகள் வர இருப்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலையில் சரியான பார்க்கிங் வசதி செய்து தரவேண்டும் என்பது சுற்றுலாப்பயணிகளின் கோரிக்கையாக இருக்கிறது.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1