கோவை - மஞ்சூர் சாலையில் பேருந்தை வழிமறித்த யானைகள்

 Saturday, December 7, 2019  07:30 AM

கோவையிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் நேற்று கோவை வந்துகொட்டிருந்த அரசு பேருந்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு 15 நிமிடங்கள் அங்கேயே நின்றது. பேருந்தின் ஓட்டுநர் ஒலி எழுப்பியதால், காட்டுயானைகள் சாலையிலிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பேருந்திலிருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர்.



கோவை - மஞ்சூர் சாலையில் யானைகள் வழிமறிப்பது தொடர்கதையாகி வருகிறது, கடந்த ஒரு மாத காலமாக காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. அவ்வப்போது, வனப்பகுகளிலிருந்து வெளியேறி சாலையில் உலா வருகின்றன. பேருந்து மற்றும் வாகனங்களை வழிமறிப்பதால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் வாகன ஓட்டிகளை கவனமுடன் இயக்க அறிவுறுத்தி வருகின்றனர்.






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2