சிறுவாணி அணை 44.5 கனஅடியை எட்டியதால் பாசன வசதிக்காக நீர் திறக்கப்பட்டது.


Source: updatenews360.
 Friday, December 6, 2019  05:52 PM  3 Comments

கோவையின் நீர் ஆதாரமாக விளங்க கூடியது சிறுவாணி அணையாகும். அதன் கொள்ளளவு 49.3 கன அடியாகும். கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வந்தது. அதன் காரணமாகவும், புயல் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அணையின் நீர் மட்டம் உயர்ந்த வண்ணமிருந்தது.நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 44.6 கன அடியை எட்டியது. அதனால் இன்று விவசாய மக்கள் பாசன வசதி பெரும் வகையில் இன்று பொதுப்பணித்துறை மாவட்ட நிர்வாகம் ஆகியோர் இணைந்து இன்று சிறுவாணி அணையின் நீர் திறந்து விடப்பட்டது. 108.51 எம்.எல்.டி திறக்கப்படட தாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆதலால் 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


SundaramKumaraswami SundaramKumaraswami commented on 1 month(s) ago
கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும், பொது பணி துறைக்கும் மிக்க நன்றி! சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு உள்ள நாட்களில் 100ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும் வகையில் எடுத்த முயற்சி மிகவும் பாராட்ட வேண்டிய கருணை!! இதுபோல நீர் வரத்து அதிகம்இருக்கும் நாட்களில் 100 வார்டு மக்களும் ஒருநாள் விட்டு ஒருநாள் சிறுவாணி குடிநீர் தேவையை பெறுவதற்கு வேண்டிய ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்!
Kavitha sivakumar Kavitha sivakumar commented on 1 month(s) ago
In kovaipudur 8 days cycle time 1 hr 1000 ltrs totally. it's sad for still we buy lorry water .
SundaramKumaraswami SundaramKumaraswami commented on 1 month(s) ago
பெருமைக்கும், மதிப்பிற்கும் உரிய நொய்யல் மீடியாகோவையின் சிறப்பு மட்டும் அல்ல நாட்டின் நிகழ்வுகள் அனைத்தும் உடனடியாக ஒளிபரப்பு செய்யும் உங்கள்தகவல் சேவைக்கு கோவை மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்! வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள், மற்றும் நிறை, குறைகள் ஆசிரியர் குழுவினர்பார்வைக்கு சரி என்றாலோ! தவறு என்றாலோ! நீங்கள் போடும் மார்க்,comment எழுதும் எங்களுக்கு ஒருமகிழ்ச்சி! குறையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று அது சரி செய்யப்பட்டது என்று அறியும் பொழுது இரட்டிப்பு மகிழ்ச்சி!! நன்றி...
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2