கோவையில் அரசி அட்டைக்கு மாற அவகாசம் முடிந்தது.. 35 ஆயிரம் பேர் மட்டுமே மாறியுள்ளனர்

 Tuesday, December 3, 2019  06:23 AM

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரேஷன் அட்டைகள் பல்வேறு வகைகளாக பிரித்து வழங்கப்பட்டுள்ளன. அரிசி அட்டைகள், சா்க்கரை அட்டைகள், காவலா் அட்டை, அந்தியோதயா அட்டை, அன்னபூா்ணா அட்டை, முதியோா் உதவித் தொகை அட்டை ஆகியவையாகும்.

இதில் அரிசி அட்டைகள் வைத்திருப்போருக்கு மட்டுமே தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா பொருட்களும் சலுகையில் அடிப்படையில் வழங்கப்படும் பொங்கல் பரிசு பொருட்களும் கிடைக்கும், இதன்படி சர்க்கரை அட்டை வைத்திருப்போர் அரிசி அட்டைகளுக்கு மாறிவருகின்றனர்.

yt_middle

கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 76 ஆயிரத்து 778 சா்க்கரை அட்டைகளில் தற்போது 35 ஆயிரத்து 408 குடும்ப அட்டைகள் சா்க்கரை அட்டையில் இருந்து அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே நவம்பா் 29 ஆம் தேதி வரை கால அவகாசமும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
fb_right
mobile_App_right
Telegram_Side
Insta_right