மேட்டுப்பாளையம் அருகே வீடு இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு


Source: Courtesy : Newstm.in
 Monday, December 2, 2019  05:11 PM

கோவை மேட்டுப்பாளையத்தில் தனியார் சுவர் இடிந்து விழுந்து மூன்று வீடுகள் தரை மட்டமானதில் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேட்டுப்பாளையம் அருகே நடூர் - ஏடிக்காலனி பகுதியிலுள்ள கண்ணப்ப நகரில் தனியாருக்கு சொந்தமான 20 அடி காம்பவுண்ட் சுவர் உள்ளது. நேற்று பெய்த மழையின் காரணமாக, சுவற்றின் உள்பகுதியில் நீர் தேங்கியதால் 20 அடி உயரமுள்ள சுவர் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. அப்போது சுவற்றை ஒட்டி இருந்த 3 ஓட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததுள்ளது. 3 வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே மண்ணோடு புதைந்து போனார்கள். இதில் 3 வீடுகளில் 18க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என கருதி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

yt_custom

இதனையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து , இரண்டு குழந்தைகள், 12 பெண்கள், 5 ஆண்கள் உள்ளிட்ட 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். 3 வீடுகளில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

Courtesy : Newstm.in


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
Twitter_Right
mobile_App_right
Insta_right
fb_right