ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அட்டவணை வெளியீடு


Source: Courtesy : Maalaimalar
 Monday, December 2, 2019  02:02 PM

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும். இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிக்கை வருகிற 6-ந்தேதி வெளியிடப்படும். அன்றே மனுதாக்கல் தொடங்க உள்ளது.

ஓட்டுப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கை அடுத்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் 2-ந்தேதி நடைபெறும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

முதல் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27.12.2019 அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.

இரண்டாம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 30.12.2019 அன்று வாக்குப்பதிவு நடை பெறும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஆகிய 4 தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், 4 விதமான வாக்குச் சீட்டுக்கள் பயன்படுத்தப்படும்.

yt_custom

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும், கிராம ஊராட்சித் தலைவர்கள் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இரண்டு கிராம ஊராட்சி வார்டுகளுக்கு பொதுவாக அமைக்கப்படும் வாக்குச் சாவடிகளில் ஒரு வார்டிற்கு வெள்ளை நிறத்திலும் பிரிதொரு வார்டிற்கு இளநீல நிறத்திலும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

இத்தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவில் 31, 698 வாக்குச்சாவடிகளிலும், 2-ம் கட்ட வாக்குப்பதிவில் 32,092 வாக்குச்சாவடிகளிலும், மொத்தம் 63,790 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சாதாரண நேரடித் தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைக் கொண்டு பின்வரும் பதவியிடங்களுக்கு மறைமுகத் தேர்தல்கள் 11.01.2020 அன்று நடைபெறும்.

மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவியிடங்கள் 31, மாவட்ட ஊராட்சித் துணைத்தலைவர் பதவியிடங்கள் 31, ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவியிடங்கள் 388, ஊராட்சித் ஒன்றியத் துணைத்தலைவர்கள் பதவியிடங்கள் 388, கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடங்கள் 12, 524, மொத்தம் 13,362.

தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வருகின்றது.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Insta_right
Twitter_Right
fb_right
Telegram_Side