சிமெண்ட் வாங்கும்போது நல்ல தரமான சிமெண்ட் என்பதை அறிந்து கொள்ள உதவும் சில குறிப்புகள்.
* சிமெண்ட்டை தேர்வு செய்யும் போது, பி.ஐ.எஸ் தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனத்தின் சிமெண்ட்டை தேர்வு செய்ய
வேண்டும்.
* தேர்வு செய்யும் நிறுவனத்தின் சிமெண்டு மூட்டையின் மீது அந்த நிறுவனத்தின் பெயர் முறையாக அச்சிடப்பட்டுள்ளதா?, மூட்டையின் வாய்ப்பகுதி கையால் தைக்கப்படாமல், இயந்திரத்தால் தைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் கவனிக்க வேண்டும். மூட்டையின் வாய்ப்பகுதியில் தையல் பிரிக்கப்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
* சிமெண்டு உற்பத்தி செய்யப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்ட தேதி மூட்டையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் இருக்கும் சிமெண்டை வாங்குவது நல்லதாகும்.
* சிமெண்டு மூட்டையினுள் கைவிட்டு சிமெண்ட்டை தொடும்போது, குளிர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு கையில் சிமெண்டை அள்ளி ஒரு வாளி நீருக்குள் போடும்போது, சிமெண்டு சில நிமிடங்கள் மிதந்த பின்பே நீரில் கரைய வேண்டும். போட்டவுடன் நீரில் கரையும் சிமெண்ட் வகைகள் அவ்வளவு நல்லதல்ல.
* சிமெண்டைக் கொஞ்சம் எடுத்து அதை பேஸ்ட் போலக்குழைத்து ஓரு அட்டை அல்லது பிளேட்டில் சதுரவடிவத்தில் அமைக்கவேண்டும். அதை அப்படியே மெல்ல நீரில் அமிழ்த்தும்போது, அந்த வடிவம் அவ்வளவு எளிதில் கரையக்கூடாது. ஒரு நாள் கழித்தே அது இறுகி கடினமானதாக
மாறவேண்டும்.
* சிமெண்டை கைகளில் எடுத்து, விரலில் வைத்து தேய்க்கும்போது கல்துகள்களை தேய்ப்பதுபோல இருக்கக் கூடாது.
* சிமெண்டை வாங்கியபின்பு காற்றோட்டம் அதிகமாக இல்லாத இடத்தில் அதை அடுக்கி வைத்து பத்திரப்படுத்த வேண்டும். மழைக்காலங்களில், சிமெண்டு மூட்டைகளை பாலிதீன் உறைகள் போட்டு மூடி வைக்கப்பட வேண்டும்