சுவையான மதுரை மட்டன் வறுவல் செய்யலாம் வாங்க....

 Monday, November 25, 2019  07:30 PM

தேவையான பொருட்கள்:

மட்டன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் – கால் கப்
பூண்டு - 10
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
தக்காளி – 1
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித் தூள் – 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு

சோம்பு – அரை ஸ்பூன்
பட்டை – சிறிதளவு

yt_middle
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 ஸ்பூன்

செய்முறை:

முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி அதில் கறியை போட்டு, சிறிதளவு வதக்கி விட்டு அதனுடன் வெங்காயம் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் உப்பு சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, , பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் அதில் தக்காளி சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு வதக்கிஅதனுடன் , வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

மட்டனில் உள்ள தண்ணீர் வற்றியதும், அதில் தேங்காய் துருவல் சேர்த்து, நன்கு கிளறி இறக்கினால், மதுரை மதுரை மட்டன் வறுவல் ரெடி


yt_custom



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


fb_right
Telegram_Side
Twitter_Right
mobile_App_right
Insta_right