100 வருடம் முன்பு ரயில் பயணம் எப்படி இருந்தது தெரியுமா?!

 Monday, November 25, 2019  05:30 PM

இன்னைக்கு ரயில் பயணங்களில் ஏகப்பட்ட வசதிகள் வந்துவிட்டது. ஸ்டார் ஹோட்டல் லெவலுக்கெல்லாம் சில சுற்றுலா ரயில்கள் இருக்கின்றன. மெட்ரோ ரயில் பயணமெல்லாம் சாத்தியப்படும் என்று சில வருடங்களுக்கு முன்பு நாம் எதிர்பார்த்திருப்போமா! சரி,நூறு வருடங்களுக்கு முன்பு ரயில் பயணம் எப்படி இருந்தது தெரியுமா?

தமிழ்நாட்டில் அல்லது தென்னிந்தியாவில் முதல் ரயில் விடப்பட்டது, சென்னை ராயபுரத்துக்கும் ஆற்காட்டுக்கும் இடையேதான். அது நடந்தது 1856-ல்.அதற்குப் பிறகு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கழித்துத்தான் அன்றைய மெட்ராஸ் நகரிலிருந்து பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கியது.

இப்போது நாம் சொகுசாக பயணிக்கும் மின்சார ரயில்களும்,டீசல் லோக்கோமோட்டிவ்களும் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. நிலக்கரியை எரித்து நீரைச் சூடாக்கி அதிலிருந்து கிடைக்கும் நீராவியைக் கொண்டு அன்றைய ரயில்கள் இயக்கப்பட்டன.அந்த ரயிலும், அதன் இஞ்சினும் நம் கற்பனைக்கெட்டாதவை!

100 வருடம் முன்பெல்லாம் ரயில் ஒரு ஊரை நெருங்கும்போது அதன் உள்ளே பார்த்தால், ஸ்டார் ஹோட்டல் பாத் ரூம் பைப் மாதிரி ஏகப்பட்ட கைப்பிடிகள் நீராவி இஞ்சினுக்குள் துருத்திக் கொண்டிருக்கும். அதில் ஒன்றிரண்டை டிரைவர் பிடித்து இழுக்க ரயிலின் வேகம் குறையும். உலகமே அதிர்வதுபோன்ற ஓசைகள் உண்டாகும். பிறகு இன்னொரு லீவர் மேல் ஏறி உட்கார்ந்து ப்ரேக்கைப் போடுவார், அதைத் தொடர்ந்துசிலிண்டரிலிருந்து நிறைய சுடு நீர் கொட்டும். காதை செவிடாக்கும்படி இரும்போடு இரும்பு உராயும் ஒலிகள் எழ ரயில் ஒரு வழியாக ப்ளாட்பாரத்தில் நிற்கும்.மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு மேற்புறம் கூரை மட்டும் கொண்ட பக்கவாட்டில் பாதிக்கு மேல் திறந்திருக்கும் வகுப்பு பெட்டியில் இருந்து மக்கள் இறங்குவார்கள். அதுவும் மனிதர்களுக்கு மட்டும் தான் வாசல் கதவு வழியாக இறங்கும் பாத்யதை உண்டு. லக்கேஜ்கள் எல்லாம் உள்ளிருந்து ஒருவர் எடுத்துக்க வெளியே இருந்து வாங்கி இறக்கப்படும்.

இதில் இன்னொரு விசயம், அன்றைய ரயில்களில், முதல் வகுப்பிலும், இரண்டாம் வகுப்பிலும் இந்தியர்கள் பயணிக்க அனுமதி கிடையாது. அந்தக் காலத்து கம்பார்ட்மெண்ட் ஜன்னல்களுக்கு கம்பிகள் கிடையாது. அது Windows டெவலப் ஆகாத காலம். லக்கேஜ்கள் ஜன்னல் வழியாக இறக்கப்பட்டதும் பொடிசுகளும் ஜன்னல் வழியாகவே இறக்கப்படுவார்கள்.

லக்கேஜ்கள் எண்ணப்படும். கை கால் முளைத்த லக்கேஜ்களுக்கும் Numbering system உண்டு. பித்தளைக் கூஜாவுக்கு நம்பர் கிடையாது. அது Hand luggage. அப்போதெல்லாம் பயணத்தின் போது படுக்கை(hold all)கண்டிப்பாக இருக்கும். அதன் உள்ளே தான் துணி மணிகளை சுருக்கம் சுருக்கமாய் அள்ளிப் போட்டு சுருட்டியிருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு படுக்கைபோலிருக்கும் லாண்டரி பேஸ்கட்.

படுக்கையை கயிறு போட்டு கட்டியிருப்பார்கள். யூனியன் ஜேக் கொடி மாதிரி ப்ளஸ், பெருக்கல் இரண்டுமே அதில் இருக்கும். எல்லா லக்கேஜ்களையும் எடுத்து தோளிலும் தலையிலும் நடக்கும் மக்கள் எல்லோரும் கண்ணில் விழுந்த நிலக்கரி துகள்களைத் துடைத்தபடி நடப்பார்கள். அவர்களின் உடைகள், கை கால், தலை எல்லாம் நிலக்கரி துகள்கள் நீக்கமற நிறைந்திருக்கும்.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1