பூரிக்கு பொருத்தமான வெஜ் குருமா செய்யலாம் வாங்க....

 Saturday, November 23, 2019  07:30 PM

வெஜ் குருமா சப்பாத்தி மற்றும் பூரிக்கு பொருத்தமான சைடிஷ். இதனுடைய சுவை எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். இதில் பலவிதமான காய்கறிகள் சேர்க்கப்படுவதால் இது சத்து மிகுந்ததும் கூட. இனி சுவையான வெஜ் குருமா செய்முறை பற்றிப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முருங்கை பீன்ஸ் – 8 எண்ணம் (நீண்ட தட்டையானது)
கேரட் – 1 எண்ணம் (பெரியது)
பச்சை பட்டாணி – 50 எண்ணம்
உருளைக் கிழங்கு – 1 (மீடியம் சைஸ்)
பட்டர் பீன்ஸ் – 25 எண்ணம்
காலி பிளவர் – 3 சுளை (மீடியம் சைஸ்)
பெரிய வெங்காயம் – 1 எண்ணம் (மீடியம் சைஸ்)
கல் உப்பு – தேவையான அளவு
கொத்த மல்லி இலை – சிறிதளவு

மசால் அரைக்க :

மல்லிப் பொடி – 1½ ஸ்பூன்
சீரகப் பொடி – ¾ ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி – ¾ ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி – ¾ ஸ்பூன்
தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்)

yt_custom

தாளிக்க :

கடுகு – ½ ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 4 ஸ்பூன்
கறிவேப்பிலை – 3 கீற்று
சின்ன வெங்காயம் – 2 எண்ணம் (மீடியம் சைஸ்)

செய்முறை :

முருங்கைப் பீன்ஸை நறுக்கி நாரினை நீக்கி சதுரத் துண்டுகளாக்கவும்.

பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் துண்டுகளாக்கவும்.

கேரட்டினை கழுவி சதுரத் துண்டுகளாக்கவும்.

உருளைக் கிழங்கினைக் கழுவி சதுரத் துண்டுகளாக்கவும்.

காலிபிளவரினை வெந்நீரில் முக்கி எடுத்து சிறுதுண்டுகளாக்கவும்.

பச்சை பட்டாணியையும், பட்டர் பீன்ஸையும் கழுவி வைக்கவும்.



yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
mobile_App_right
Insta_right
Telegram_Side
fb_right