இன்றைய தினம் - நவம்பர் 21

 Thursday, November 21, 2019  12:21 AM

உலகத் தொலைக்காட்சி நாள்

உலகத் தொலைக்காட்சி நாள் (World Television Day) உலகெங்கும் ஆண்டுதோறும் நவம்பர் 21 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகள் அமைதி, பாதுகாப்பு, பொருளாதாரம், சமூக மாற்றங்கள் மற்றும் தமது கலை, கலாசார தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தமக்கிடையே பரிமாறிக் கொள்ள இந்நாள் சிறப்பான நாளாகக் கருதப்பட்டது. இதன்படி முதல் தொலைக்காட்சி நாள் 1997-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 'ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.

1970 – ச. வெ. இராமன், நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர் (பி. 1888) நினைவு தினம்

1991 – தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1903) நினைவு தினம்



1789 – வட கரொலைனா ஐக்கிய அமெரிக்காவின் 12வது மாநிலமாக இணைக்கப்பட்டது.

1877 – ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய போனோகிராப் என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமசு ஆல்வா எடிசன் அறிவித்தார்.

1942 – அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.

1969 – முதலாவது ஆர்ப்பநெட் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.









Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyalmedia_right2
Noyyal_media_Right1
Website Square Vanavil2