குறிச்சியில் அரவான் திருவிழா 12-ம் தேதி கோலாகலமாக துவங்குகிறது.

 Friday, November 8, 2019  04:30 PM

கோவையில் திரளான மக்கள் பங்கேற்கும் மிகப்பெரிய விழாவில் குறிச்சி அரவான் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டின் இந்த திருவிழா வரும் 12-ம் தேதி முதல் 22-வரை நடைபெறுகிறது.

yt_custom

குறிச்சி மற்றும் கோவை சுற்றுவட்டார பகுதிகளின் ஒற்றுமைக்கான அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் விழாவாக பார்க்கப்படும் இந்த விழா 12-ம் தேதி துவங்குகிறது. ஊர் எல்லை கட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்ச்சிகளுடன் துவங்கி, அரவானுக்கு உயிர் பிடித்தல், கம்பம் நட்டு பூசாத்துதல், பெருமாள் கோவிலில் அரவான், அனுமார் சுவாமிகள் கட்டுதல், அரவான் எழுந்தருளுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 22-ம் தேதி இறுதியாக தேவேந்திர குல வேளாளர் சமூக மேடையில், அனைத்து சமூக பெரியதனக்காரர்கள் முன்னிலையில், களப்பலியுடன் விழா நிறைவடைகிறது.


yt_middlePlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


mobile_App_right
Twitter_Right
Insta_right
fb_right
Telegram_Side