3,800 ஆண்டுகளுக்கு முன் உருவான கொடைக்கானல் மலை - ஒரு சிறப்பு பார்வை

 Friday, November 8, 2019  04:30 PM

சர்வதேச கோடைவாசஸ்தலமான கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலையில் 7,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த கொடைக்கானல் மலை 3,800 ஆண்டுகளுக்கு முன் புவியியல் பரிணாம மாற்றத்தால் உருவானதாக புவிஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1844-ம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் கொடைக்கானலை கண்டுபிடித்தனர். இங்கு இங்கிலாந்தில் நிலவும் குளிர்ந்த காலநிலை காணப்பட்டதால், விடுமுறைக் காலத்தில் ஓய்வெடுக்க 1848-ம் ஆண்டு தற்போதைய கொடைக்கானல் ஏரி அருகே இரண்டு பங்களாக்களை கட்டி குடியேறியுள் ளனர். 1875-ம் ஆண்டுவரை, கொடைக்கானல் மலையில் ஓய் வெடுக்க வரும் ஆங்கிலேய அதிகாரிகள், அவர்களது குடும்பத் தினர், பளியன் என்ற ஆதிவாசி மக்கள் உள்ளிட்ட 500 மக்களே வசித்தனர். 1914-க்குப் பின், கொடைக்கானலுக்கு ஆங்கிலேயர் தார் சாலை அமைத்தனர். அதன்பிறகு ஐரோப்பியர்கள், இந்தியர்களையும் சேர்த்து சுமார் 2000 பேர் தான் கொடைக்கானலில் வசித்தனர்.

சாலை உருவான வரலாறு

சென்னை மாநில ஆளுநராக இருந்த லார்டு டென்டன்ட்,‘மெட்ராஸ் ஸ்டாப் கார்ப்பரேசன்’ பொறியாளர்களை அழைத்துவந்து ஆய்வு செய்து, 1875-ம் ஆண்டு கொடைக்கானலில் 55 கி.மீ. தூரத்துக்கு மலையைக் குடைந்து ‘கூலி காட் ரோடு’ என்ற மண் சாலையை அமைக்கத் தொடங்கினார். 1878-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றபின், அந்த சாலை முழுமை அடைய வில்லை. அதன்பின், 1914-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள், ஓய்வு பெற்ற லார்டு டென்டன்ட்டையே அழைத்துவந்து, கொடைக்கானலில் ஊத்து என்ற பகுதியில் இருந்து அடிவாரம் வரை 11 கி.மீ. தூரத்துக்கு ‘பிளாக் டாப்ட்’ என்ற ஒருவகை தார் சாலையை அமைத்தனர்.

கழிவு கருங்கல், குரூட் ஆயில் (கச்சா எண்ணெய்) மற்றும் ஆற்று மணலைக் கொண்டு இந்த சாலையை அமைத்தனர். இரண்டாம் கட்டமாக 1916-ம் ஆண்டு, இரண்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு ஊத்து அருகே வாலகிரியில் இருந்து கொடைக்கானல் டவுன் வரை 43 கி.மீ. தூரத்துக்கு தார் சாலை அமைத்தனர். அடிவாரத்தில் இருந்து கொடைக்கானல் வரை 27 இடங்களில் ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் இருந்து மழைநீர் சாலையில் கொட்டாமல் சாலையின் அடியில் செல்ல பாலங்கள் அமைத்தனர். ஏழு இடங்களில் இந்த சாலையில் 10 கி.மீ. தொலைவுக்கு ஒரு இடத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் அமைத்து அந்த துறை அலுவலர்கள் மண் சரிவு, மரம், பாறைகள் விழாமல் தடுக்கவும், விழுந்தால் அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

yt_middle

கொடைக்கானல் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. முக்கியமாக புதிதாக திருமணமான தம்பதிகளால் விரும்பப்படுகிற இடம் இது. அடர்ந்த காட்டிற்குள் மரங்கள், பாறைகள் மற்றும் அருவிகளோடு இயற்கை அழகுடன் இருக்கும் கொடைக்கானல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய ஸ்தலம்.

கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. மேலும் இங்குள்ள பல கிறிஸ்துவ ஆலயங்களை கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.

ப்ளம்ஸ் மற்றும் பேரிக்காய் போன்ற பழங்களுக்கும் கொடைக்கானல் புகழ் பெற்றது. சாக்லேட் விரும்பிகளின் சொர்க்கம் கொடைக்கானல். இங்கே வீட்டில் தயார் செய்யும் சாக்லேட்கள் பல கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. யூக்கலிப்டஸ் மூலிகை தைலம் இங்கே அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. அறிய வகை பூவான 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை இங்கே காணலாம். மேலும் இங்கே நடை பயணம், படகு சவாரி, குதிரை சவாரி மற்றும் மிதிவண்டி பயணம் போன்ற பலதரப்பட்ட தீரச்செயல் மிக்க விளையாட்டுக்களை விளையாடி மகிழலாம்.

கொடைக்கானலின் வானிலை

வருடம் முழுவதும் கொடைக்கானலில் தட்ப வெப்பநிலை இனிமையாக இருக்கும். கொடைக்கானல் செல்ல சிறந்த காலம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையும், பின் செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை. ஜூனிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை பச்சை பசுமையாய் காட்சி அளிப்பதால் அப்போதும் கொடைக்கானல் சென்று மகிழலாம்.

கடந்துவிட்டது. இந்த சாலைக்குநூற்றாண்டு விழா எடுக்க வேண்டிய நேரத்தில், சாலையை நெடுஞ் சாலைத்துறை பராமரிக்காமல், கண்காணிக்காமல் விட்டதால் இன்று நிலச்சரிவால் மூடப்பட்டது வேதனை அளிக்கிறது என்றார்.


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
mobile_App_right
Insta_right
fb_right
Telegram_Side