இந்த தலைமுறை காணாத ஒன்று.. வருகிறது உள்ளாட்சி தேர்தலில்...


Source: Noyyal Media Team
 Friday, November 8, 2019  03:09 PM

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சூடுபிடித்துள்ளன. இந்த முறை தேர்தல் ஆணையம் அதிக வாக்கு வாக்குசாவடிகளை அமைத்துள்ளதால் வாக்கு எந்திரம் பற்றாக்குறை காரணமாக கிராமங்களில் இருக்கும் ஊராட்சி அமைப்புகளுக்கு வாக்கு சீட்டு முறையினை அமல்படுத்த இருக்கிறது. இந்த வாக்கு சீட்டுமுறை இந்த தலைமுறை காணாத ஒன்றாகும்..

தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வாக்கு செலுத்தும் இயந்திரம் 1980-ம் ஆண்டு ஹனீபா என்பரால் கண்டுபிடிக்கப்பட்டது. 1982-ம் ஆண்டு கேரளாவில் முதன் முதலாக பொது தேர்தலில் குறைந்த வாக்குசாவடியிலேயே பயன்படுத்தப்பட்டு பரிசோதித்து பார்க்கப்பட்டது , அதன் பின்பு மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டது. 1999-ம் வருடம் கோவா சட்டசபை தேர்தலில் தான் 100 சதவீதம் இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.


yt_middle
சட்டசபை தேர்தகளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வாக்கு இயந்திரம் 2009-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்திய நாடு முழுமைக்கும் வாக்கு இயந்திரம் பயன்படுத்ப்பட்டது. கடந்த 10
ஆண்டுகளாகவே வாக்கு சீட்டு முறை கைவிடப்பட்ட நிலையில் தற்போது வாக்கு இயந்திரங்கள் பற்றாக்குறை காரணமாக ஊராட்சிகளில் வாக்கு சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது.

80-களில் பிறந்த வாக்காளர்கள் அனேகமாக இந்தமுறையை பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை, தங்கள் பகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களின் பெயர் ஒரு சீட்டில் அச்சடித்து தரப்படும், அதனுடன் கொடுக்கப்பட்ட சீல் குறியீட்டை இட்டு அந்த சீட்டை மடித்து அங்குள்ள வாக்கு பெட்டியில் இடவேண்டும். நமது நாட்டில் பல்வேறு தலைவர்களை தேர்ந்தெடுத்த பழையமுறை இதுவாகும்.

இந்த தலைமுறை காணாத ஒரு பழைய முறை தற்போது கிராமப்புற ஊராட்சி இளம் வாக்காளர்களுக்கு கிடைத்துள்ளது ஒரு ஆச்சர்யமே.....


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
Insta_right
mobile_App_right
fb_right
Telegram_Side