நீண்ட இடைவெளிக்கு பின்னர் நாளை துவங்குகிறது பரளிக்காடு சூழல் சுற்றுலா..

 Friday, November 8, 2019  02:42 PM

கோவை மாவட்டம் காரமடை வட்டாரத்தில் உள்ள பவானி ஆற்றின் கரையில் உள்ளது பரளிக்காடு வனப்பகுதி. இங்கு வாரத்தின் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் பரளிக்காடு வனத்துறை மற்றும் அங்குள்ள பழங்குடி இனமக்கள் இணைந்து ஒரு பரளிக்காடு சூழல் சுற்றுலா-வை ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பவானி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளலாம், அதன் பின் மலைவாழ் மக்களின் கையால் கரிகுழம்புடன் மதிய உணவு உண்ணலாம், அதன் பிறகு பவானி ஆற்றில் பாதுகாப்பான இடத்தில குளிக்கலாம். இதற்கு இணையத்தில் முன்பதிவு செய்யவேண்டும்..

கடந்த 1 மாதத்திற்கும் மேலாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி பகுதிகளில் பெய்து வந்த தொடர்மழையின் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பில்லூர் அணைக்கட்டு நிரம்பி வழிந்தது, இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பவானி ஆற்றங்கரையில் நடந்து வரும் சூழல் சுற்றுலா தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பவானி ஆற்றில் வெள்ளநீர் குறையாமல் சென்றுகொண்டிருந்த காரணத்தால் பரளிக்காடு சுற்றுலா தடையை நீடித்தது வனத்துறை.

yt_custom

தற்போது பவானி ஆற்றில் வெள்ளம் குறைந்ததை அடுத்து மீண்டும் நாளை (09-11-2019) முதல் பரளிக்காடு சூழல் சுற்றுலா துவங்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்னனர்.



yt_middle



Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Twitter_Right
mobile_App_right
Telegram_Side
fb_right
Insta_right