கோவை, கேரள எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டமா? டிஜிபி ஆலோசனை!


Source: Source : tamil.samayam
 Friday, November 8, 2019  02:31 PM

தமிழ்நாடு, கேரள மாநில எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து காவல்துறை உயா் அதிகாரிகளுடன் தமிழ்நாடு டிஜிபி கோவையில் நேற்று (நவம்பர் 7) ஆலோசனை நடத்தினாா்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி அருகே உள்ள மஞ்சகண்டி வனப்பகுதியில் காவல் துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் மணிவாசகம், கார்த்தி, ஸ்ரீமதி, சுரேஷ் ஆகியோரை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து 6 துப்பாக்கிகள் , லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த தீபக், சோனா, லட்சுமி ஆகிய 3 பேர் தப்பியோடி கேரள வனப்பகுதிக்குள் தலைமறைவாகினர். அவர்களை கேரள மாநில காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

yt_middle

இந்நிலையில் தமிழ்நாடு - கேரள எல்லையான நீலகிரி, கோவை மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக தமிழ்நாடு காவல் துறை சட்டம், ஒழுங்கு டிஜிபி திரிபாதி நேற்று முன்தினம் (நவம்பர் 6) இரவு கோவை வந்தாா்.

கோவை காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நேற்று (நவம்பர் 7) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி சுனில்குமாா், எஸ்.பி. மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில் கோவை, நீலகிரி மாவட்ட எல்லைகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம், ஊடுருவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு டிஜிபி ஆலோசனை வழங்கினாா்.

அதேசமயம் மாவோயிஸ்ட் தீபக் துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ்களில் இந்த புகைப்படம், வீடியோ காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஏ.கே.47 ரக துப்பாக்கி மாவோயிஸ்டுகளுக்கு எப்படி கிடைத்தது என்று இரு மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
fb_right
Insta_right
mobile_App_right
Twitter_Right