கர்ப்பிணிகளுக்கு எந்த சூழ்நிலையில் சிசேரியன் செ‌ய்ய‌ப்படு‌கிறது?


Source: tamil.webdunia
 Friday, November 8, 2019  12:18 PM  1 Comments

9ஆம் மாத இறுதியில் கர்ப்பப்பை கீழே இறங்கி வந்து குழந்தையின் பிரசவத்திற்கு வழி கொடுக்கும். ஆனால் சில தாய்மார்களுக்கு வயிறு மேலேறி இருக்கும். வேலை எதுவும் செய்யாமல், நடக்காமல், ஓய்வு எடுத்தபடியே, படுத்தபடியே இருக்கும் பெண்களுக்கும் கர்ப்பப்பை கீழே இறங்காமல் இருக்க வாய்ப்புகள் உண்டு.

சரியான உணவு, தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பது, நடைப்பயிற்சி, எளிதான வேலைகள் செய்து வரும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

முதல் ‌பிரசவ‌ம் சிசேரியன் செய்தால் இர‌ண்டாவது முறையும் சிசேரியன் தா‌ன் செ‌ய்வா‌ர்க‌ள் எ‌ன்று கூற‌ப்படுவத‌ற்கு‌ம் உ‌ண்மையான காரண‌ம் உ‌ள்ளது.
முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு எ‌ன்பா‌ர்க‌ள். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று யாராலும் கணிக்க முடியாது.

எனவே, முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களு‌க்கு சுக‌ப்‌பிரசவ‌த்‌தி‌ற்கான சாத்தியக் கூறுகள் 50 ‌விழு‌க்காடுதா‌ன் என்று சொல்ல வேண்டும்.

yt_middle
பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியதாகிறது.

ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சுக‌ப்‌பிரசவ‌ம் என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகிவிடுகிறது.

‌சிசே‌ரிய‌ன் எ‌ன்று முடிவு செ‌ய்தாலு‌ம், வ‌லி வ‌ந்த ‌பிறகு செ‌ய்யலா‌ம். ஏ‌ன் மு‌‌ன்கூ‌ட்டியே செ‌ய்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் கே‌ள்‌வி எழு‌ம்.

அதாவது,. பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் வரலா‌ம். அ‌ப்போதுதா‌ன் தாய் சாப்பிட்டிருப்பாள் எ‌ன்று வை‌த்து‌க் கொ‌ள்வோ‌ம். அ‌ப்போது அவளு‌க்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது, 10, 15 நாட்கள் முன்பாகவே ‌சிசே‌ரிய‌ன் செய்ய நேரிடுகிறது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

User Comments...


pandiyarajan pandiyarajan commented on 6 month(s) ago
OK
Subscribe to our Youtube Channel


fb_right
mobile_App_right
Twitter_Right
Telegram_Side
Insta_right