இன்றைய தினம் - 08

 Friday, November 8, 2019  05:59 AM

சர்வதேச கதிரியல் நாள்

சர்வதேச கதிரியல் நாள் (International Day of Radiology) என்பது இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். X-கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. கதிரியலுக்கான ஐரோப்பியக் கழகம், மற்றும் கதிரியலுக்கான அமெரிக்கக் கல்லூரி ஆகியன இணைந்து 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின.

2016 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 500, 1000 ரூபாய் நாணயத் தாள்களை செல்லுபடியற்றதாக அறிவித்தார்.

1895 – எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்லெம் ரோண்ட்கன் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்தார்

1942 – இரண்டாம் உலகப் போர்: அல்ஜியர்சில் பிரெஞ்சு எதிர்ப்புப் புரட்சி இடம்பெற்றது.

1965 – பிரித்தானியாவில் மரணதண்டனை ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

2011 – 2005 யூ55 என்ற சிறுகோள் பூமியை 324,600 கிமீ தூரத்தில் அணுகியது.


yt_middle
2013 – சூறாவளி ஹையான், பிலிப்பீன்சில் விசயன் தீவுகள் பகுதியைத் தாக்கியதில், 6,340 பேர் உயிரிழந்தனர்.

1680 – வீரமா முனிவர், இத்தாலியத் தமிழறிஞர் (இ. 1742) பிறந்த தினம்

1831 – லிட்டன் பிரபு, இந்தியாவின் 30வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1880) பிறந்த தினம்

1910 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, தமிழக தவில் கலைஞர் (இ. 1964) பிறந்த தினம்

1927 – அத்வானி, இந்திய அரசியல்வாதி பிறந்த தினம்

1987 – சக்தி கிருஷ்ணசாமி, தமிழக எழுத்தாளர், பாடலாசிரியர் திரைக்கதை ஆசிரியர் (பி. 1913) நினைவு தினம்

2013 – சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி. 1964) நினைவு தினம்
yt_customPlease login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Telegram_Side
mobile_App_right
fb_right
Twitter_Right
Insta_right