ஜி.டி. நாயுடு மாணவர்களுக்கு விதித்த கட்டளைகள் என்ன தெரியுமா?

 Wednesday, November 6, 2019  04:30 PM

சென்னை மாகாண கவர்னராக அப்போது பணியாற்றியவர் 'சர்.ஹார்தர் ஹோப்' எனும் வெள்ளைக்காரர். அவர் திரு. ஜி.டி. நாயுடு அவர்களின் நண்பர்.

தமிழ் நாட்டைத் தொழில் மயமாக்க வேண்டும், அதற்குப் பொறியியல் கல்லூரிகள் தோன்ற வேண்டும் என்று எண்ணிய திரு. நாயுடு, கவர்னரைச் சந்தித்து தனது விருப்பத்தை அவரிடம் மனுக்களாகக் கொடுத்து, கோயம்புத்தூர் நகரில் தனது சொந்த பெரும் பொருட் செலவில் 1945-ஆம் ஆண்டில் ஒரு தொழில் நுட்பப் பள்ளியைத் திறந்தார். அந்த தொழில் நுனுக்கப் பள்ளிக்குரிய அரசு ஆதரவுகளைப் பெருமளவில் செய்து கொடுத்தவர் சென்னை கவர்னர் என்பதால், அதற்கான நன்றியாக அந்தப் பள்ளிக்கு சர்.ஆர்தர் ஹோப் பாலி டெக்னிக் என்று பெயரிட்டார் திரு. நாயுடு.

அக் கல்லூரிக்குப் பல லட்சம் ரூபாயில் கட்டிடங்களையும், நன்கொடை களையும் வழங்கிடத் தயாரானார். அரசாங்கமும் அவருக்கு மிக நன்றாக ஆதரவு வழங்கி ஊக்குவித்தது. துவங்கப்பட்ட பிறகு இக் கல்லூரியின் முழுப் பொறுப்பையும் திரு.நாயுடு அரசாங்கத்திடமே ஒப்படைத்து விட்டார்.

பொறியியல் துறையில் கல்வி கற்றிடும் மாணவர்களது இன்சினியரிங் படிப்பை, திரு. நாயுடு முதல்வராக இருந்தபோது இரண்டாண்டாக மாற்றினார். ஓராண்டு கால உழைப்பை மாணவர்கள் வேறு எதற்காவது பயன்படுத்தி முன்னேற்றம் பெறட்டுமே என்ற நோக்கோடு அவர் அவ்வாறு குறைத்தார். ஆனால், அப் பள்ளி நிர்வாகம் அரசுவிடம் ஒப்படைக்கப் பட்ட பிறகு, மீண்டும் பொறியியல் படிப்பு மூன்றாண்டாக மாற்றப்பட்டு விட்டது.

கட்டளைகள் :

கல்வி பெறும் மாணவர்கள் கவனம்; பாட ஆசிரியரின் கருத்திலேயே வேரூன்ற வேண்டுமே தவிர, சிறு சிறு ஆசா பாசங்களிலோ, அல்லது வேறு எந்த கேலிக்கைகளிலோ திரும்பக் கூடாது என்று அடிக்கடி கூறுபவர் திரு. ஜி. டி. நாயுடு.

பள்ளி உணவு விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் ஊர் சுற்றவோ, திரைப்படம் பார்க்கவோ அல்லது அரசியல் சொற் பொழிவுகளைக் கேட்கவோ போகக்கூடாது என்பது நாயுடுவினுடைய கண்டிப்பான கட்டளை.


Real_Custom1
ஒரு வேளை மாணவர்கள் அதை மீறுவார்களானால், தயவு தாட்சண்யமின்றி, உடனே அத்தகைய மாணவர்கள் கல்விக் கோட்டத்தை விட்டு நீக்கப் படுவார்கள். பிறகு எந்த பரிந்துரை வந்தாலும் அவர்கள் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள்.

ஜி.டி. நாயுடு கல்விக் கோட்டத்தில் வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை உண்டு. அந்த நாளிலும் கூட மாணவர்கள் கல்விச் சிந்தனையோடுதான் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டுமே தவிர, ஆட்டம் பாட்டமோ, ஆடம்பர கேளிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது.

வாரம் ஒரு நாள் விடுமுறையைத் தவிர, மற்ற நாட்களில் மாணவர்கள் கல்விக் கோட்டத்திற்கு வந்தாக வேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் விடுமுறை வேண்டக் கூடாது.

மாணவர்கள் படிக்கக் கூடாத ஆபாசமான புத்தகங் களையோ, கதை, நாவல்களையோ, பத்திரிக்கைகளையோ படிக்கக் கூடாது. மீறிப் படித்தால் அவர்களுக்குக் கடும் தண்டனை விதிக்கப்படும்.

உணவு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், தங்கள் அறையையும், சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தவறினால், அன்று முழுவதும் உணவு விடுதியை அந்த மாணவர்கள் சுத்தம் செய்து கொண்டே இருக்கும் தண்டனையைப் பெறுவார்கள்.

உணவு உண்ணும் மாணவர்கள் இலையில் சோத்துப் பருக்கை ஒன்று கூட இருக்கக் கூடாது. மீதம் ஏதாவது இலையில் இருந்தால், அவர்கள் ஒரு நாள் முழுவதும் சமையல் வேலையைச் செய்தாக வேண்டும்.

கொடுத்த தண்டனையை நிறைவேற்றாத மாணவர்களுக்கு, மறுநாள் அந்தத் தண்டனை இரு மடங்கு தண்டனையாக்கப்படும். அதற்கும் அந்த மாணவர்கள் கட்டுப்படவில்லை என்றால், அவர்கள் அந்தப் பள்ளியை விட்டே நீக்கப்படுவார்கள் என்பது உறுதி.

-- தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு நூலிலிருந்து


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Website Square Vanavil2
Real_Right2
Real_Right3