சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கும் - பிர்லா நீர்வீழ்ச்சி

 Monday, November 4, 2019  06:30 PM

கோவை மாவட்டம் வால்பாறையில், சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கும் வகையில் இயற்கை அழகும், பசுமையான தேயிலை தோட்டமும், வனவிலங்குகளும், பிரசித்தி பெற்ற கோவில்களும், பி.ஏ.பி.,அணைகளும் அமைந்துள்ளன. அவர்களின் மனதை வெகுவாக வருடியது, சோலையாறு பிர்லாநீர்வீழ்ச்சி தான். சோலையாறு அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளில் ஒன்றான இந்நீர்வீழ்ச்சி வால்பாறை நகரிலிருந்து, நான்கு கி.மீ., தொலைவில் உள்ளது. தேயிலைச்செடிகளின் மத்தியில் தவழ்ந்து வரும் அருவியை காண, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிகின்றனர்.


Real_Custom1
கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பசுமையாக காட்சியளிக்கும் இந்தப்பகுதி வால்பாறை வருபவர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.மழை இருந்தாலும், இல்லா விட்டாலும் இந்த நீர்வீழ்ச்சியை பொறுத்தவரை, எப்போதும் தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கும். அதனால் தான் சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றின் மிக அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாமல் சென்று, குளித்து குஷியுடன் திரும்புகின்றனர்.

குழந்தைகள் முதல் முதியவர் வரை இங்கு குளிக்கலாம் என்றாலும், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க கட்டணம் எதுவும் இல்லை என்பதால், சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right2
Real_Right3
Website Square Vanavil2