மூணார்- உங்களை பச்சை கம்பளம் விரித்து வரவேற்கிறது !!!..

 Tuesday, October 15, 2019  02:32 PM

மூணார் – பெயரை கேட்கும்போதே குளிர்ச்சியும் பசுமையும் நெஞ்சில் நிழலாடுவது நிச்சயம்

பயணத்தில் நாட்டமுள்ளவர்களும், இயற்கையை ரசிக்கும் அனைவரும் கண்டிப்பாக சென்று பார்க்கவேண்டிய இடம் மூணார்.

குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் சென்று இளைப்பாறுவதற்கு அற்புதமான இடம்.

கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாசஸ்தலமாக மட்டுமல்லாமல் மூணார் சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.

ஓய்வையும், இயற்கையின் அரவணைப்பையும் நாடி லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா மட்டும் தூரதேசங்களிலிருந்து மூணார் சுற்றுலாப்பிரதேசத்திற்கு விஜயம் செய்கின்றனர்.

புத்துணர்ச்சியூட்டும் எழில் பூமி

காலனிய காலத்திய மற்றும் கடந்த நூற்றாண்டுக்குரிய நவீன வரலாற்று பின்னணியை மூணார் பிரதேசம் கொண்டுள்ளது. ஸ்காட்லாந்து பசுமை சமவெளிகளை நினைவூட்டும் இந்த மலைப்பிரதேச அழகு ஆங்கிலேயர்களுக்கும் வந்த நாளிலேயே பிடித்துப்போனதில் வியப்பொன்றுமில்லை. அவர்கள் விரும்பிய இயற்கையின் தூய்மையும் இனிமையான சூழலும் இங்கு விரவியிருந்தது.

எனவே அவர்கள் படிப்படியாக இப்பிரதேசத்தை தென்னிந்தியாவை ஆண்ட (ஆங்கிலேய) அதிகார வர்க்கத்துக்கான ஒரு கோடை விடுமுறை வாசஸ்தலமாக மாற்றிக்கொண்டனர்.

அந்த துவக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக இன்று மூணார் பிரதேசமானது தனது பிரமிக்க வைக்கும் எழிற்காட்சிகளுடன் கூடிய ஒரு பிரசித்தமான விடுமுறை சுற்றுலா ஸ்தலமாகவே மாறிவிட்டது.

ஒரு இயற்கை ரசிகர் எதிர்பார்க்கும் யாவற்றையுமே தன்னுள் கொண்டிருப்பது இந்த மூணார் ஸ்தலத்தின் விசேஷமாகும். கொஞ்சமும் இடைவெளியின்றி நீண்டு பரந்து காட்சியளிக்கும் தேயிலைத்தோட்டங்களும், பசுமையான பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், பலவகை தாவர உயிரின வகைகளும், காட்டுயிர் சரணாலயங்களும், நறுமணம் நிரம்பிய காற்றும் இனிமையான குளுமையான சூழலும் இங்கு பயணிகளை வரவேற்கின்றன.

கண்களை திறந்தாலே போதும் காணுமிடமெங்கும் இயற்கையின் வண்ணக்கோலம்!

ஒரு உற்சாகமூட்டும் குளுமையான சூழலில் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு இதைவிட ஒரு சிறந்த ஸ்தலம் இருக்க முடியாது. மலைப்பாதை சைக்கிள் பயணம் மற்றும் மலையேற்றம் போன்ற பொழுதுபோக்குகளில் விருப்பமுள்ளவர்களுக்கு ஏற்ற பாதைகள் இங்கு ஏராளம் உள்ளன.

வெல்வெட் மெத்தைகள் போன்று பரந்து விரிந்துள்ள தேயிலைத்தோட்டங்கள் வழியே இங்கு பயணிகள் ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பலவிதமான அரிய பறவைகள் வசிப்பதால் இப்பகுதி பறவை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சியளிக்கும் மூணார் ஸ்தலமானது குடும்பச்சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குதூகலம் விரும்பும் குழந்தைகள், தேனிலவுப்பயணம் நாடும் தம்பதிகள், புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப்பயணிகள் மற்றும் தனிமை விரும்பும் ஒற்றைப்பயணிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகளையும் தன்னை நோக்கி ஈர்க்கிறது.

சைக்கிள் பயணிகள் மற்றும் பிக்னிக் ரசிகர்களின் சொர்க்கம்

மூணார் மலைவாசஸ்தலத்தின் முக்கிய விசேஷங்களில் ‘இரவிக்குளம் நேஷனல் பார்க்’ எனப்படும் தேசிய இயற்கைப்பூங்காவும் ஒன்றாகும். இங்கு தமிழ்நாட்டின் அரசு விலங்கான ‘வரையாடு’ எனும் அரிய வகை ஆடு காணப்படுகிறது.

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி’ இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம்.

இது தவிர, மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் ஒரு அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன. இந்த பால்பண்ணை இந்திய – ஸ்விஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும்.


Real_Custom1
மூணார் பகுதியில் ரம்மியமான இயற்கைச்சூழலின் பின்னணியில் அமைந்துள்ள நீர்விழ்ச்சிகளும் காணப்படுகின்றன. பள்ளிவாசல் நீர்வீழ்ச்சி, பவர்ஹவுஸ் நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிற சின்னக்கனல் நீர்வீழ்ச்சி ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியமான அவசியம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சிகளாகும்.

ஆனயிறங்கல் நீர்த்தேக்கம் என்பது மற்றொரு முக்கியமான பார்த்து ரசிக்கவேண்டிய ஸ்தலமாகும். இங்குள்ள டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை அருங்காட்சியகத்தில் இப்பகுதியின் தேயிலைத்தயாரிப்பு மற்றும் வரலாற்று தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பொத்தன்மேடு, ஆட்டுக்கல், ராஜமலா, எக்கோ பாயிண்ட், மீனுளி மற்றும் நாடுகாணிபோன்ற இடங்களும் மூணார் பகுதியிலுள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அறியப்படுகின்றன.

மூணார் மலைப்பகுதி உற்சாகமூட்டும் பருவநிலையுடன் எந்த நாளிலும் விஜயம் செய்ய ஏற்றவாறு காணப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மிக எளிதாக இங்கு பயணம் மேற்கொள்ளலாம்.

எல்லா முக்கிய தென்னிந்திய நகரங்களிலிருந்தும் மூணார் மலைவாசஸ்தலம் வருவதற்கு ஒருங்கிணைந்த சுற்றுலாச்சேவைகள் கிடைக்கின்றன. ஹோட்டல்கள், ரிசார்ட் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள் போன்றவற்றில் தங்களுக்கு பொருத்தமானவற்றை பயணிகள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
ராஜமலைத் தொடரில்தான் அழிந்துவரும் விலங்கினமான வரை ஆடு (மலை ஆடு) ஏராளமாக உள்ளன. மூனாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ராஜமலைத் தொடரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்க்காடு மிகப் புகழ்பெற்றது. இதன் சுற்றுவட்டத்தில் மாட்டுப்பட்டி அணை உள்ளது.

இந்த ஊர் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். . நல்ல இயற்க்கை சூழ்ந்த மழை வாசஸ்தலம். தேயிலை எஸ்டேட் நிறைந்த இடம்.

மூன்று ஆறுகள் சந்திக்கும் இடம் அதனால் மூனார் என்று அழைக்கப்படுகிறது.

முத்திரப்புழா, சண்டுவரை மற்றும் குண்டலா என்ற மூன்று ஆறுகள் தான் அவை.

மூணார் எப்போ வேணா போகலாம் அப்படி ஒரு இடம், வழியில் பல அழகான சிறு சிறு ஓடைகளில், நீர் ஓடுவது நமது கண்களுக்கு விருந்து. கொஞ்சம் மழைய பொருட்படுத்தாத ஆளுங்களுக்கு மூணார் ஒரு சொர்க்கம் மூணார் போறவங்க நல்ல குளிர் தாங்கும் உடைகளையும், மழை நேரத்துக்கு தேவையான உடைகளையும் எடுத்து செல்வது நல்லது, டெம்பரேச்சர் 0c – 25c வரைக்கும் இருக்கும்.

மூணார் பக்கதிலே பாக்க வேண்டிய இடங்கள்

1) மேட்டுபட்டி டேம் ( மூணார்லிருந்து 13கிமி தொலைவில் இருக்கு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1700 அடி உயரத்தில் அமைக்க பட்டுள்ளது இங்கே இந்தியா – சுவிஸட்சர்லாந்து கூட்டமைப்பில் ஒரு அழகிய மாட்டு பண்ணை உள்ளது, பார்வையாளர்கள் நேரம் 0900 – 1100 hrs and 1400 – 1530 hrs. தலைக்கு 5 ரூபாய் வீதம் நுழைவுக்கட்டணம் வசுலிக்கிறார்கள், மொத்தம் உள்ள 11 பண்னைகளில் 3 பண்ணைகளை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறார்கள்)

2) போத்தமேடு.

போத்தமேட்டிலிருந்து பார்த்தால் மூணாரின் மொத்த அழகையும் கண்டுகளிக்கலாம், இது ஒரு நல்ல வியூபாயிண்ட். இந்த இடம் டிரக்கிங் மற்றும் ஜங்கிள் வாக் போண்ற நிகழ்வுகளுக்கு ரொம்ப
ஏற்றது.

3) தேவி குளம் ( 7 கிமி தொலைவு முணாரிலிருத்து )

இங்கிருக்கும் சீதா தேவி ஏரி மிகவும் அழகானது இந்த ஏரி trout fishing. கிற்க்கு மிகவும் சிறந்தது.

4) பள்ளிவாசல் ( 8 கிமி தொலைவு முணாரிலிருத்து )

இங்குதான் கேரளாவின் முக்கியமான Hydro Electric Project

5) அட்டுக்கல் ( 9 கிமி தொலைவு முணாரிலிருத்து )






Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Real_Right2
Real_Right3
Website Square Vanavil2