உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

 Thursday, October 10, 2019  12:30 AM

உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் (World Day Against the Death Penalty) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது.

உலக மனநல நாள்

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது

2015 – மனோரமா, தமிழக திரைப்பட நகைச்சுவை நடிகை (பி. 1937) நினைவு தினம்

1908 – கே. பி. சுந்தராம்பாள், தமிழிசைப் பாடகி, நாடக, திரைப்பட நடிகை (இ. 1980) பிறந்த தினம்

1960 – வடிவேலு, தமிழ் நகைச்சுவை நடிகர் பிறந்த தினம்

1974 – மு. வரதராசன், தமிழறிஞர் (பி. 1912) நினைவு தினம்

1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.1780 – கரிபியனில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை இறந்தனர்.

1944 – இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.

1949 - விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.

1967 – விண்வெளி தொடர்பாக அறுபதுக்கும் அதிகமான நாடுகள் ஜனவரி 27 ஆம் நாள் கையெழுத்திட்ட உடன்பாடு அமுல் படுத்தப்பட்டது.

1971 - விற்பனை செய்யப்பட்டு அமெரிக்காவுக்குக் கொண்டுபோகப்பட்ட லண்டன் பாலம் அரிசோனாவின் லேக் ஹவாசு நகரில் மீள அமைக்கப்பட்டது.

1927 – நேதுநூரி கிருஷ்ணமூர்த்தி, தென்னிந்திய கருநாடக இசைப் பாடகர், (இ. 2014) பிறந்த தினம்

1954 – ரேகா, இந்திய நடிகை பிறந்த தினம்

1973 – இராஜமௌலி, தெலுங்கு திரைப்பட இயக்குனர் பிறந்த தினம்


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel


Noyyal_media_Right1
Noyyalmedia_right2